ஈ
|
244 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
ஈடு :
முதற்பாட்டில், 1‘எவ்வகையாலும் வேறுபட்ட சிறப்பினையுடைய மோக்ஷத்திலும் எனக்கு
விருப்பம் இல்லை; உன் திருவடிகளை என் தலையிலே வைக்கவேண்டும்,’ என்கிறார்.
2‘ஆழ்வீர்!
மோக்ஷத்தைக் கொள்ளும்,’ என்றான் இறைவன்; ‘வேண்டா’ என்றார்; ‘மா வீடு - வேறுபட்ட சிறப்பினையுடைய
மோக்ஷங்காண்’ என்றான்; ‘அதுவும் வேண்டா’ என்றார்; ‘எம் மா வீடுகாண் - செல்வம், ஆத்ம லாபம்
என்று இருக்கவேண்டா; பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷங்காண்’ என்றான்; ‘அதுவும் எனக்கு வேண்டா’ என்கிறார்.
எம் மா வீட்டுத் திறமும் செப்பம் - எவ்வகையாலும் நன்றான மோக்ஷத்தைப் பற்றிய வார்த்தையும்
பேசோம். நீ அதனைப் பற்றிப் பேசவும் உரியவன் அல்லை; நான் மறுக்கவும் உரியவன் அல்லேன்
என்றபடி. இனி, ‘எம் மா வீட்டுத் திறமும் செப்பம்’ என்பதற்கு, ஒரு புலவர் எம் மா வீட்டு விகல்பமும்
செவ்வியவாம் என்று பொருள் கூறினர். அப்பொருளில், வீட்டு விகல்பமாவது - சாலோக்ய சாரூப்ய
சாமீப்ய சாயுஜ்யம் என்கிற இவை. செவ்விய ஆகையாவது, சாலோக்யம் முதலானவைகள் எல்லாம்3
இம்மோக்ஷத்திலே உண்டாகை.
‘ஆயின், உமக்கு வேண்டுவது
என்?’ என்னில், ‘நின் செம்மா பாத பற்புத் தலை சேர்த்து - மலர்ச்சி, செவ்வி, குளிர்த்தி,
நாற்றங்களுக்குத் தாமரையை ஒரு போலி என்னலாம்படி இருக்கிற உன்னுடைய திருவடிகளைக் கொண்டு வந்து
என் தலையிலே வைக்க வேண்டும். செம்மா பாதம் - செம் என்று சிவப்பாய், மா என்று கறுப்பாய்,
அகவாய் சிவந்து புறவாய் நீலமாய் இருக்கிற திருவடி என்றபடி. இனி, செம், மா பாதம் - என்பதற்குச்
செம்மையால் நினைக்கிறது - செவ்வையாய், அடியார்கட்கு வருந்த வேண்டாதபடியான ஆர்ஜவத்தையுடைத்தாய்
என்றும், மா என்று பெருமை
_____________________________________________________________
1. ‘எம்மா வீடு’ தொடங்கித்
‘தலைசேர்த்து’ என்னுமளவும் கடாட்சித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. ‘செப்பம்’ என்ற
மறுப்புக்குக் காரணத்தைக் காட்டாநின்று கொண்டு, ‘வீடு, மா வீடு, எம்
மா வீடு’ என்று பிரித்துக்
கருத்து அருளிச் செய்கிறார், ‘ஆழ்வீர்!’ என்று தொடங்கி.
‘வீடு’ என்றது, செல்வத்தைக் கூறுகின்றது;
‘மா வீடு’ என்றது, ஆத்மலாபத்தைக்
கூறுகின்றது; ‘எம் மா வீடு’ என்றது, பரம புருஷார்த்த லக்ஷண
மோக்ஷத்தைக் கூறுகிறது.
3. ‘இம்மோக்ஷத்திலே’
என்றது, ‘பாதபற்புத் தலை சேர்த்தலாகிய இம்மோக்ஷத்திலே’
என்றபடி.
செப்பம் என்பதற்கு,
இருபொருள் அருளிச்செய்கிறார்; முதற் பொருளில் எதிர்மறை
முற்று; இரண்டாவது பொருளில் பண்புப்பெயர்;
செம்மைபகுதி.
|