பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

பத்தாந்திருவாய்மொழி - பா. 7

279

    கிறி என நினைமின் -‘இது நல்லுபாயம்’ என்று புத்தி பண்ணுங்கோள். கீழ்மை செய்யாது - நான் சொல்லுகிறது ஒழியத் தண்ணிய வானவற்றைச் செய்ய நில்லாமல். தண்ணியவாவன, வேறு பிரயோஜனங்களில் ஆசையும், சிற்றின்ப ஆசையும், உறி அமர் வெண்ணெய் உண்டவன் கோயில் - உறிகளிலே சேமித்துக் கள்ளக்கயிறு உருவி வைத்த வெண்ணெயைத் ‘தெய்வங் கொண்டதோ? என்னலாம்படி களவுகண்டு அமுது செய்தவன் வந்து வாழ்கிற தேசம். 1இத்தால், ‘அனுகூலருடைய பரிசமுள்ள பொருளால் அல்லது தரிக்கமாட்டாதவன்’ என்பதனைத் தெரிவித்தபடி.

    மறியொடு பிணைசேர் மாலிருஞ்சோலை - குட்டியும் தாயும் பிரியாமல் வாழ்கிற தேசம். 2இதனால், 3‘ரக்ஷ்ய ரக்ஷகங்கள் தம்மில் பிரியாமல் வாழ்கின்ற தேசம்’ என்பதனைத் தெரிவித்தபடி. நெறிபட அதுவே நினைவது நலமே -4நெறிபடுகைக்கு நினைக்குமதுவே இவ்வாத்துமாவுக்கு நன்மையாவது. இனி, ‘நெஞ்சிலே 5அடிபடும்படியாகத் திருமலையைச் சொல்லுமதுவே நன்மையாவது’ என்று கூறலுமாம். ‘அத்தை நினைக்குமதுவே விலக்ஷணம்; அஃது ஒழிந்தவை எல்லாம் பொல்லாதவை’ என்பார், ‘அதுவே நினைவது நலமே’  என்கிறார்.                                                      

(6)

218

        நலம்என நினைமின் நரகுஅழுந் தாதே;
        நிலம்முனம் இடந்தான் நீடுஉறை கோயில்
        மலம்அறு மதிசேர் மாலிருஞ் சோலை
        வலம்முறை எய்தி மருவுதல் வலமே.

    பொ-ரை : நன்மையானது என்று நினைமின், நரகத்தில் அழுந்தாமல்; பிரளயங்கொண்ட காலத்தில் வராகமாகி நிலத்தைக் கேட்டால் குத்தி எடுத்து வந்தவன் நித்தியவாசஞ்செய்யுங்கோயில், களங்கமற்ற சந்திரன் சேர்கின்ற திருமாலிருஞ்சோலை மலையை முறையாய் வலம் வந்து சென்று சேர்தல் வலிமையாகும்.

_____________________________________________________________

1. ‘இத்தால்’ என்றது, களவு கண்டு அமுது செய்தமையைச் சுட்டுகிறது.

2. ‘இதனால்’ என்றது, மறியொடு பிணை சேர்ந்திருத்தலைச் சுட்டுகிறது.

3. ரக்ஷ்ய ரக்ஷகங்கள் - காக்கப்படுகின்ற பொருள்களும், காக்கும் இறைவனும்.

4. நெறிபடுகை - வழியிலே செல்லுகை.

5. அடிபடுதல் - சத்தையுண்டாதல்.