New Page 1
28 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
‘வீழ்த்தொழிந்தாய்’
என்பன இரண்டு சொற்கள். மா வாய் பிளந்து மருதிடை போய் மண் அளந்த மூவா முதல்வா - கேசி
வாயை வருத்தம் இன்றிக் கிழித்து, இரட்டை மருத மரங்களின் நடுவே போய், மஹாபலி கவர்ந்துகொண்ட
பூமியை எல்லை நடந்து மீட்டுக்கொண்டு, இப்படி உதவிகளைச்செய்து, பின்னையும் ஒன்றும் செய்யாதானாய்க்
குறைப்பட்டு, இவற்றின் இரக்ஷணத்திலே முயற்சி உள்ளவனாய் இருக்கின்றவனே! இனி, 1‘மூவா
முதல்வா’ என்பதற்கு, ‘இப்படி எல்லாம் செய்தும் ஒன்றும் செய்யாதாரைப் போன்று உலகைப் படைத்தல்
முதலியவற்றைச் செய்தவனே!’ என்று பொருள் கூறலும் ஒன்று.
இனி எம்மைச்
சோரேல்2 - கேசி தொடக்கமான விரோதிகளைப் போக்கியது போன்று, தன் விரோதியையும்
போக்கி, அவன் வந்து முகங்காட்டச் சொல்லுகிறாள். இனி, ‘தம்முடைய ஆபத்தின் மிகுதியாலே
‘வந்து முகங்காட்டும்’ என்னும் விசுவாசத்தலே சொல்லுகிறாள்.’ என்று கோடலுமாம். 3‘கழிந்து
போன காலத்தைக் குறித்துத் துக்கத்தால் பீடிக்கபட்டவராகிச் சோகிக்கிறார்’ என்கிறபடியே,
முன்புள்ள காலம் இழந்ததாகிலும், இனி மேலுள்ள காலம் இவ்வாத்துமாவைக் கைவிடாது ஒழிய வேண்டும்
என்பாள், ‘இனி’ என்கிறாள். ‘போன காலத்தை மீட்க ஒண்ணாது’ என்று அதற்குச் சோகிக்கிறாள்
என்றபடி ‘இப்படிச் சோகித்தார் உளரோ? எனின், 4‘என்னுடைய காதலியானவள் தூரத்திலிருக்கிறாள்
என்று அதற்குச் சோகிக்கிறேன் அல்லேன்; பிரிவு வந்து என்று அதற்குச் சோகிக்கிறேன் அல்லேன்;
அது அவன் தலையினை அறுக்கத் தீரும்;
____________________________________________________________
1. மூவாமை -அழியாமை; ‘நித்தியம்’
என்றபடி, முதல்வன் -உலகைப் படைத்தவன் என்பது
பொருள். முன்னைய பொருளில் ‘ஒன்றுஞ் செய்யாதானாய்க்
குறைப்பட்டு’ என்றது,
‘மூவா’ என்ற சொல்லின் பொருள்; மூவா - முடியாத; சோம்பாத என்றபடி. முதல்வன்
-
ரக்ஷகன்.
2. ‘இனி’ என்பதற்கு, இரண்டு
வகையில் பாவம் அருளிச்செய்கிறார் ‘கேசி தொடக்கமானார்’
என்று தொடங்கி இரண்டு வாக்கியங்களால்.
3. ‘இனி’ என்றதற்குக்
கருத்து அருளிச்செய்கிறார் ‘கழிந்து போன’ என்று தொடங்கி, இது,
ஸ்ரீராமா, கிக்ஷ்கிந். 30 : 3.
4. ஸ்ரீராமா. யுத்த 5 : 5.
|