பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

பத்தாந்திருவாய்மொழி - பா. 8

281

    நிலம் முனம் இடந்தான் நீடு உறை கோயில் - வராக கல்பத்தின் ஆதியிலே மகாவராகமாய், அண்டப்பித்தியிலே சேர்ந்து உருமாய்ந்த பூமியை ஒட்டு விடுவித்து எடுத்துக்கொண்டு ஏறின 1நிருபாதிக ஸௌஹார்த்தமுடையவன். அவதாரங்கள் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்தியவாசம் செய்கிற தேசம். மலம் அறு மதி சேர் மாலிருஞ்சோலை - சந்திரபதத்துக்கு அவ்வருகே வளர்ந்து நிற்கையாலே அவன் போம்போது சிகரங்களிலே தேய்ப்புண்டு சாணையிலே இட்டாற்போன்று களங்கம் அறுகின்ற மாலிருஞ்சோலை. இனி, ‘மலமறு மதிசேர்’ என்பதற்குத் ‘திருமலையாழ்வார் தாம் ஞான லாபத்தை உண்டாக்குவர்’ என்று, திருக்குருகைப்பிரான் பிள்ளான் அருளிச்செய்வர். வலம் முறை எய்தி மருவுதல் வழக்கே - 2காலயவநன் ஜராசந்தன் முதலியோர்களைப் போலே அன்றி, அனுகூலமான முறையிலே கிட்டி மருவுதல் வலம்: வலம் - பலம்: அல்லது சிறப்பு. சிறப்பு என்ற பொருளில் வரம் என்ற சொல்லின் திரிபு.       

(7)

219 

        வலஞ்செய்து வைகல் வலம்கழி யாதே
        வலஞ்செயும் ஆய மாயவன் கோயில்
        வலஞ்செயும் வானோர் மாலிருஞ் சோலை
        வலஞ்செய்து நாளும் மருவுதல் வழக்கே.

    பொ-ரை : வலிமையை வளர்த்து, நாடோறும் அவ்வலிமையை மற்றைய விஷயங்களுக்கு உறுப்பாக்கிக் கெடுக்காமல், கிருஷ்ணனாகிற மாயவன் வலம் செய்கிற கோயில், நித்தியசூரிகள் வலம் செய்கிற திருமாலிருஞ்சோலையை நாளும் வலஞ்செய்து சென்று சேர்தல் நியாயமாம்.

    வி-கு : ‘வலம் கழியாது வலஞ்செய்து மருவுதல் வழக்கு’ எனக் கூட்டுக. ‘கோயிலாகிய மாலிருஞ்சோலை’ என்க. வலஞ்செய்து - ஒரு சொல் நீர்மைத்து. ‘ஆய மாயவன் வலம் செய்யும்’ என மாற்றுக. ஆய - பசுக்களையுடைய. ஆ - பசு. இனி, ‘ஆயர் வமிசத்தில் வளர்ந்தவனான’ எனலுமாம். மாயவன் - திருமகளையுடையவன். மா - திருமகள்.

________________________________________________________

1. நிருபாதிக ஸௌஹார்த்தம் உடையவன் - காரணமின்றியே நன்மையைச் செய்பவன்.

2. காலயவனன், ஜராசந்தன் என்னும் இவ்விருவரும், கண்ணபிரானோடு போர் செய்வதற்கு
  வடமதுரையை முற்றுகை இட்டவர்.