பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

என

பத்தாந்திருவாய்மொழி - பா. 11

287

என்று பலகாலும் படைப்பவனாதலின், ‘பொருள் என்று இவ்வுலகம் படைத்தவன்’ என்கிறார். மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் ஆகையாலே, அவனுடைய குணவிஷயமாக மருள் இல்லாதவர் ஆதலின், ‘மருளில் சடகோபன்’ என்கிறார்.

    ‘பிரபந்தமோ?’ எனில், தெருள் கொள்ளச் சொன்ன ஓர் ஆயிரம் - மருள் உண்டாய்க் கழிய வேண்டிற்று இவர்க்கு. இவருடைய பிரபந்தத்தைக் கற்றார்க்கு முதலிலே அறிவின்மைதான் இல்லை. கேட்டார்க்குத் தெளிவைப் பிறக்கும்படி அன்றோ அருளிச் செய்தது? தம்முடைய ஞானத்துக்கு அடி, சர்வேஸ்வரன்; இவர்களுடைய ஞானத்திற்கு அடி, தாம் என்றபடி. ‘பிரபந்தந்தான் செய்வது என்?’ என்னில், அருளுடையவன் தாள் அணைவிக்கும். அருளையுடையவன் திருவடிகளிலே சேர்த்துவிடும். அருளைக் கொண்டே பரம்பொருளை நிரூபிக்கவேண்டி இருத்தலின், 1அருளையுடையவன்’ என்கிறார். முடித்து - அது செய்யுமிடத்துச் சம்சார சம்பந்தத்தை வாசனையோடே  போக்கித் திருவடிகளிலே சேர்த்து விடும். ஒரு ஞானலாபத்தைப் பண்ணித் தந்துவிடுதலே அன்றி, 2அர்த்தகிரியாகாரியாய் இருக்குமாதலின், ‘முடித்தே’ என ஏகாரங் கொடுத்து ஓதுகின்றார்.                                      

(11)

    முதற்பாட்டில், ‘திருமலையாழ்வாரைக் கடுக அடைமின்,’ என்றார்; இரண்டாம் பாட்டில், ‘திருமலையோடு சேர்ந்திருக்கின்ற திருப்பதியை அடைமின்,’ என்கிறார்; மூன்றாம் பாட்டில், ‘அதனோடு சேர்ந்த அயன்மலை அமையும்,’ என்றார்; நான்காம் பாட்டில், 3‘திரிதந்தாகிலும்’ என்கிறபடியே ‘மீண்டும் திருமலையை அடைமின் என்றார்; ஐந்தாம் பாட்டில், ‘அதனோடு சேர்ந்த புறமலையை அடைமின்’ என்றார்; ஆறாம் பாட்டில், ‘திருமலைக்குப் போகும் வழியை நினைத்தலே அமையும்,’ என்றார்; ஏழாம் பாட்டில், ‘அவ்வழியோடு சேர்ந்த திருமலையை அடைமின்,’ என்றார்; எட்டாம் பாட்டில், ‘நித்தியசூரிகளுக்குக்கூட அடையத் தக்கது, ஆகையால், திருமலையே அடையத் தக்கனவற்றுள் உயர்ந்தது’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘திருமலையைத் தொழக்கடவோம்’ என்கிற துணிவே

________________________________________________________

1. ‘அருளுடைய பெருமாள்’ என்பது கள்ளழகர்க்கு ஒரு திருநாமம்.

2. அர்த்தகிரியாகாரி - பிரார்த்திக்கப்படுகின்ற பலனைக் கொடுக்கக் கூடியது.

3. கண்ணிநுண் சிறுத்தாம்பு, 3.