பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

288

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

வேண்டுவது என்றார்; பத்தாம் பாட்டில், ‘எல்லாப்படியாலும் திருமலையாழ்வாரை அடைதலே பேறு,’ என்று தலைக்காட்டினார்; முடிவில் இது கற்றார்க்குப் பலம் அருளிச்செய்தார்.

    முதல் திருவாய்மொழியாலே, ‘மணியை வானவர் கண்ணனைத் தன்னதோர் அணியை’ என்கிறபடியே, ‘விலக்ஷண விஷயமாகையாலே பிரிந்தாரைக் கண்ணாஞ்சுழலை இடப் பண்ணும்,’ என்றார்; இரண்டாந்திருவாய்மொழியாலே, ‘கூடினாலும் அதனைப் போன்று மறப்பிக்கும்,’ என்றார்; மூன்றாந்திருவாய்மொழியால், ‘கூடிய பொருள் தான் நிரதிசய சுகரூபம்,’ என்றார்; நான்காந்திருவாய் மொழியில், அவ்விஷயத்துக்குத் தேசிகரோடு அனுபவிக்கப் பெறாமையாலே மோகத்தை அடைந்தார்; ஐந்தாந்திருவாய்மொழியால், தாம் ஆசைப்பட்டபடியே வந்து கலந்தமை சொன்னார்; ஆறாந்திருவாய் மொழியால், தம் இழவுக்கும் அவன் ஐயங்கொள்ளும் என்றார்; ஏழாந்திருவாய்மொழியால், தம்முடைய சம்பந்தி சம்பந்திகளையும் ஏற்றுக் கொண்டபடியைச் சொன்னார்; எட்டாந்திருவாய்மொழியால் அவனுடைய மோக்ஷ பரதத்துவத்தை அருளிச்செய்தார்; ஒன்பதாந்திருவாய்மொழியால், பிராப்பிய நிஷ்கர்ஷம் பண்ணினார்; பத்தாந்திருவாய்மொழியால், அறுதியிட்ட பிராப்பியத்தைப் பெறுகைக்குத் திருமலையாழ்வாரை அடையச் சொன்னார்.

திருவாய்மொழி நூற்றந்தாதி

        கிளர்ஒளிசேர் கீழ்உரைத்த பேறு கிடைக்க
        வளர்ஒளிமால் சோலை மலைக்கே - தளர்வறவே
        நெஞ்சைவைத்துச் சேரும்எனும் நீடுபுகழ் மாறன்தாள்
        முன்செலுத்து வோம்எம் முடி.

இரண்டாம் பத்து ஈட்டின் தமிழாக்கம் முற்றிற்று.

ஆழ்வார் எம்பெருமானார் சீயர் திருவடிகளே அரண்.
வடக்குத் திருவீதிப்பிள்ளை மலரடி வாழ்க!
நம்பிள்ளை நற்றாள் வாழ்க!
மாறன் மலரடி வாழ்க!