பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

பிற்சேர்க்கை -II

 

வியாக்கியானத்தில் வந்துள்ள ஐதிஹ்யங்கள்

    ‘பிரமன் முதலானோர் எப்போதும் திருமேனியைப் பற்றி இருப்பர்களோ?’
என்றுநஞ்சீயர் பட்டரைக் கேட்க, ‘ஒரோ ஆபத்துகளிலே திருமேனியிலே
இடங்கொடுக்கிறான்; அந்நீர்மையை விடமாட்டாமையாலே ஆழ்வார்கள்
அதனையே வாய் புலற்றுகிறார்களத்தனை’ என்றருளிச் செய்தார். பக். 41.

 

எம்பார் திருவாய்மொழிக்குப் பொருள் அருளிச்செய்து வருங்கால், இப்பாசுரம் வந்த வளவில், எம்பார் கோஷ்டியிலே ‘இவ்வாத்துமாவுக்குப் பிரதம குரு யார்?’ என்ற ஒரு வினா எழுந்தது; இருந்த முதலிகளுட்சிலர், ‘ஆசாரியன்’ என்றனர்; சிலர், ‘ஆசாரியன் திருவடிகளிலே அடைவதற்கு வா என்று அழைத்துக்கொண்டு போய்ச் சேரவிட்ட ஸ்ரீவைஷணவர்’ என்றனர்; எம்பார், ‘அங்ஙனன்று காண்; அவன் இவனை அழைத்தாலும் இவன் ‘அல்லேன்’ என்னாதபடி ‘இசைவித்து’ என்கிறபடியே அகவாயிலே இருந்து இசைவித்த சர்வேஸ்வரன்காண் பிரதமகுரு,’ என்றருளிச்செய்தார். ப. 62.

 

     முன்பே சேர்ந்திருக்குமவர்கட்குத் திண்ணிதான மதியைக் கொடுக்குமவனை. அதாவது, அம்பரீடன் தவம் செய்துகொண்டிருக்க, சர்வேஸ்வரன் இந்திரன் வேடத்தைத் தரித்துக் கொண்டு சென்று, ‘உனக்கு வேண்டியவற்றை வேண்டிக்கொள்’ என்ன, ‘நான் உன்னை ஆராதிக்குமவன் அல்லேன்காண்; என்னைச் சமாதி பங்கம் பண்ணாதே போக வல்லையே? உன்னைக் கும்பிடுகிறேன்,’ என்றான். ப. 74, 75.

 

     குணாதிக விஷயமாகையாலே முடிந்து பிழைக்கவும் ஒட்டாது; ‘ஸ்ரீபரதாழ்வான் இன்னம் ஒருகால் அவ்விராமபிரானுடைய முகத்தில் விழிக்கலாமாகில், அருமந்த பிராணனைப் பாழே போக்குகிறது என்?’ என்று இராச்சியத்தையும் தொட்டுக்கொண்டு கிடந்தான். பக். 92

மால்யவானில் பெருமாள் இருந்த போது கார்காலத்திலே பட்ட பாட்டைக் கண்டு ‘வசிஷ்டசிஷ்யன் ஒரு பெண் நிமித்தமாக இப்படிப் படுவதே!’ என்று பழித்துச் சிரித்திருந்தான், விரக்தன்