பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

292

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

 

ஆகையாலே; இப்போது ‘இவளைப் பிரிந்து தேகத்தைத் தரித்துக் கொண்டிருப்பதே!’ என்கிறான் விசேஷஜ்ஞன் ஆகையாலே. பக். 97.

 

     “ஈஸ்வரனுக்கு விக்ரஹமில்லை; விபூதி இல்லை’ என்கிறவர்கள் முன்பே ஆப்ததமரான இவர், ‘திருவுடம்பு வான்சுடர்’ என்னப் பெறுவதே! ‘ஈஸ்வரனுக்கு விக்ரஹமில்லை, குணமில்லை’ என்கிறவர்கள் செய்து வைக்கமாட்டாத பாவமில்லை; அவர்களைச் சார்ந்து அதனைக் கேட்க இராதபடி பெருமாள் நமக்குச் செய்த உபகாரம் என்?” என்றருளிச்செய்வர் நஞ்சீயர். ப. 122, 123

 

     “அப்பரம்பொருள், தேவன் அசுரன் மனிதன் விலங்கு இவைகளாக இல்லை; பெண்ணாகவுமில்லை; அலியாகவுமில்லை; ஆணாகவுமில்லை; வேறுபட்ட மற்றைப் பொருள்களாகவுமில்லை; குணமாக இல்லை; மற்றைக் கிரியையாக இல்லை; சேதனனுமாக இல்லை; அசேதனனுமாக இல்லை,” என்னும் வேத புராண வாக்கியங்களை மேற்கோள் காட்டி அருளிச்செய்தவாறே, அருகிருந்து கேட்டிருந்த ஒரு தமிழ்ப்புலவர், ‘சுவாமி! நாட்டில் காணப்படுகின்ற மூன்றின் படியும் அல்லனாகில், சொல்லப்படுகின்ற பொருள் சூன்யமோ பின்னை?’ என்று கேட்க, பட்டர், ‘பிள்ளை இயலறிவுக்குப் போந்திருந்ததில்லையே! ‘ஆணல்லன், பெண்ணல்லன், அலியுமல்லது’ என்றார் இலரே? ‘அல்லன், அல்லன், அல்லன்’ என்கின்றாராதலின் ‘புருஷோத்தமன்’ என்பதனை அச்சொற்கள் தாமே தோற்றுவிக்கின்றனவே?” என்றருளிச்செய்தார். ப. 138.

 

     ஆளவந்தாருக்குக் குருகை காவலப்பன் அருளிச்செய்ததாக அருளிச்செய்யும் வார்த்தை: - ‘அப்பன் ஸ்ரீபாதத்திலே ஒரு ரஹஸ்ய விசேஷமுண்டு’ என்று மணக்கால் நம்பி அருளிச்செய்ய, அது கேட்கவேணும் என்று ஆளவந்தாரும் எழுந்தருள, கங்கை கொண்ட சோழபுரத்தேற, அப்பனும் அங்கே ஒரு குட்டிச்சுவரிலே யோகத்திலே எழுந்தருளியிருக்க, ‘இவரைச் சமாதி பங்கம் பண்ணவொண்ணாது’ என்று சுவருக்குப் புறம்பே பின்னே நிற்க, அப்பனும் யோகத்திலே எழுந்தருளியிருக்கின்றவர் திரும்பிப் பார்த்து, ‘இங்கே சொட்டைக் குலத்தில் ஆரேனும் வந்தார் உளரோ?’ என்று கேட்டருள, ‘அடியேன்’ என்று ஆளவந்தாரும் எழுந்தருளி வந்து கண்டு, ‘நாங்கள் பின்னே தெரியாதபடி நிற்க இங்ஙனம் அருளிச்செய்கைக்கு ஏது என்?’ என்ன, ‘நானும் தானுமாக அனுபவியாநின்றால், பெரிய பிராட்டியார் அன்பு நிறைந்த வார்த்தைகளைக் கூறினும் அவர் முகங்கூடப் பாராத சர்வேஸ்வரன் என் கழுத்தை அமுக்கி நாலு