பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

மூன

ஐதிஹ்யங்கள்

293

 

மூன்றுதரம் அங்கே எட்டிப் பார்த்தான்; இப்படி அவன் பார்க்கும் போது சொட்டைக்குடியில் சிலர் வந்தார் உண்டாகவேணும் என்றிருந்தேன்காணும்’ என்றருளிச்செய்தார். ப. 151.


    சர்வேஸ்வரன் ஒருவனை விஷயீகரித்தால், அது பின்னை அவன் அவளில் நில்லாதேயன்றோ? ‘இருடிகள் குடியிருப்பை அழித்தான் மைதிலியைப் பிரித்தான்; நம் உயிர் நிலையிலே நலிந்தாற்போலே ஸ்ரீ ஜடாயு மஹாராஜரை நலிந்தான்; இவையெல்லாம் செய்யமாட்டானே இவன் இனி; ஜீவிக்கிற நாளிலே ‘நாம் செய்யும் நன்மை இவன் விலக்காதொழிவது காண்’ என்றிருந்தோம்; அந்நாளில் அது பெற்றிலோம்; நாம் தேடி இருந்தது முந்துற முன்னம் சித்திக்கப்பெற்றோம்; இவன் நாம் செய்யும் நன்மை விலக்காதானான அளவு பிறந்த இன்றும் இழக்கவேண்டுமோ? வேண்டுவன செய்யப்பாரும்; நீர் இறாய்த்திருந்தீராகில், குடல் தொடக்கு உடையாரிலே ஒருவன் செய்யுமித்தனையன்றோ? நாம் இவனுக்கு வேண்டுவன செய்ய நீர் கடக்க நில்லீர்,’ என்றார் பெருமாள். இங்கு ஸ்ரீ விபீஷணாழ்வான் பக்கல் இருந்த அன்பு இராவணன் அளவும் சென்றது. ‘ஸ்ரீ மஹாராஜர்க்குச் சத்துரு’ என்று வாலியைக் கொன்ற பின்னர் மஹாராஜர் கண்ணநீர் பொறுக்கமாட்டாமல் தாமும் கண்ணநீர் விழவிட்டார். ‘மங்கள குணமுள்ள மாலாகாரரே! உம்முடைய மனமும் எக்காலமும் தர்மத்தில் செல்லப்போகிறது; உம்முடைய வமிசத்தில் பிறந்தவர்களுக்கும் நீண்ட ஆயுள் உண்டாகப்போகிறது,’ என்கிறபடியே ஸ்ரீ மாலாகாரர் பக்கல் அங்கீகாரம், அவன் சந்தானத்தளவும் சென்றது. ஸ்ரீ கண்டாகர்ணன் பக்கல் பண்ணின விஷயீகாரம், அவன் தம்பியளவும் சென்று, ‘நீ அவனுக்கு நல்லையாகில், அவன் முன்னாகப் போ’ என்றருளிச் செய்தான். ப. 173.


     எம்பார் இத்திருவாய்மொழி அருளிச்செய்யப் புக்கால் ‘ஸ்ரீ வைஷ்ணவன் ஆனேன் என்கிறார்’ என்பாராம். ப. 174.


     ‘பிராட்டியே! அழகிய மணவாளன் உன்னுடைய நாயகன் என்ற சம்பந்தத்தைக்கொண்டே அவனைத் தரிசிக்கின்றோம்; கிட்டுகின்றோம்; அவனுக்குத் தொண்டுகளைச் செய்கின்றோம்; அத்தொண்டினால் அவனுக்கு விளைகிற பிரீதியைக் கண்டு மகிழ்ச்சி கொள்ளுகிறோம்,’ என்று அருளிச்செய்தார் பட்டர். ப. 180.


     எம்பார் இத்திருவாய்மொழி அருளிச்செய்யப் புக்கால், இருந்தவர்களை ‘யார்?’ என்று கேட்டுக் கதவுகளையும் அடைப்பித்து, குஹ்யமாகவாம் அருளிச்செய்வது. ப. 238.