இங
294 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
இங்கே எம்பார்க்கு
ஆண்டான் அருளிச்செய்த வார்த்தையை நினைவுகூர்வது. அதாவது, ‘கிணற்றிலே விழுந்தவனுக்கு இரண்டு பேர்
கைகொடுத்தால், எடுக்குமவர்களுக்கும் எளிதாய் ஏறுமவனுக்கும் எளிதாய் இருக்குமிறே; அப்படியே ஆகிறது,’
என்று. ப.
248.
‘மயர்வற மதிநலம்
அருளப்பெற்றவர் ‘தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே’ என்று பிரார்த்திப்பான் என், திருவுள்ளமானபடி
செய்கிறான் என்றிராதே?’ என்று பிள்ளை திருநறையூர் அரையர் எம்பாரைக் கேட்க, ‘அது கேளீர்,
முன்பு பிரிந்தன்று; பின்பு பிரிவுக்குப் பிரசங்கம் உண்டாயன்று; இரண்டும் இன்றி இருக்கத் திருமார்விலே
இருக்கச்செய்தே, ‘அகலகில்லேன், அகலகில்லேன்’ என்னப்பண்ணுகிறது விஷய ஸ்வபாவமிறே; அப்படியே
பிராப்ய ருசி பிரார்த்திக்கப் பண்ணுகிறது,’ என்றருளிச்செய்தார். ப.
251,
252.
‘பிள்ளை திருநறையூர்
அரையரும், பட்டரும் பிரதக்ஷணம் பண்ணாநிற்கப் பின்னே சேவித்துக்கொண்டு போனேன்; அல்லாதார்
கடுங்குதிரை போலே வாராநிற்க, இவர்கள் திருக்கோபுரங்களையும் திருமாளிகைகளையும் கண்ணாலே
பருகுவாரைப்போலே பார்த்துக் கொண்டு வந்தார்கள்,’ என்று நஞ்சீயர் அருளிச்செய்வர். ப.
283.
|