கள
52 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
கள்வா - 1சர்வேஸ்வரன்
பக்கலிலே வந்து வரம் கொள்கிற இடத்திலே, ‘தேவர் இன்னம் எனக்கு ஒரு வரம் தரவேண்டும்.;
நீர் தந்த வரம் நிலை நிற்கும்படி என் பக்கலிலே வந்து ஒரு வரம் பெற்றுப் போகவேண்டும்,’ என்று
வேண்டிக்கொள்ள ‘அப்படியே செய்கிறோம்’ என்று விட்டு, ‘உருக்குமிணிப் பிராட்டிக்கு ஒரு
பிள்ளை வேண்டும்’ என்று சென்று நின்று, ‘நமோ கண்டாய கர்ணாய’ என்றாற்போல ஏத்த, 2‘பார்வதியோடு
கூடிய சிவன், இருகைகளையும் குவித்துக்கொண்டு விஷ்ணுவைப் பார்த்து, விஷ்ணுவினுடைய பெருமையினைச்
சொல்லுதற்குத் தொடங்கினான்’ என்கிற படியே, புறப்பட்டு, 3‘நீ கறுப்புடுத்துத் தாழ
நின்ற நிலையிலே இச் செயலைச் செய்தால் இதனை நாட்டார் 4‘மெய்’ என்றிருப்பார்களோ?
‘கள்வா’ என்பர்கள். ஈண்டுக் களவாவது, தன் ஸ்தவதந்தர்யத்தை மறைத்துப் பரதந்திரனாய் நிற்கும்
நிலை. கைலாச யாத்திரியிலே 5‘நமோ கண்டாய கர்ணாய நம:’ என்று துதி செய்த அறியாத
வாயானபடியால் 6மீன் துடிக்கிறபடி பாராய்’ என்றான். 7‘நாத்தழும்ப நான்முகனும்
ஈசனுமாய் முறையால் ஏத்த’ என்கிறபடியே, துதி செய்து நாத்தழும்புபட்டுக் கிடப்பது அவர்களுக்கு அன்றோ?
இவன் தாடி நின்ற
நிலையும் துதி செய்த நிலையும் களவு என்னுமிடத்தை விளக்குகிறார் மேல்: எம்மையும் ஏழ் உலகும்
நின் உள்ளே தோற்றிய, ‘நீ இவற்றைப் படைக்கின்ற காலத்தில்
____________________________________________________________
1. ‘சுவாமி! சகல பிராணிகளுள்
பிரசித்தமான வேறான வரத்தை எனக்குக் கொடுக்க
வேண்டும்; கேசவரே! தேவரீர் மனிதராய் அவதரித்து
என்னைப் பூஜிக்கவேண்டும்,’
என்றும், ‘தேவர்களுடைய காரியத்துக்காகச் செய்யும் அவதாரங்களிலே
மனிதனாகவும்
பிறப்பேன் நான்; அப்பொழுது உன்னைப் பூஜிக்கப்போகிறேன்; நீயும் வரம்
கொடுக்கிறன்றவனாகக் கடவாய்!’ என்றும் வருகிற புராண வசனங்களை நோக்குக.
2. ஹரி வம்ஸம்.
3. கறுப்புடுத்தல் - பரத்துவ
நிலையை மறைத்தல்; மாறுவேடம் தரித்தல்.
4. ‘மெய் என்றிருப்பர்களோ?
என்றது, வரங்கொடுத்ததற்காகச் செய்தான் என்று
இருப்பார்கள் என்றபடி.
5. ஹரிவம்ஸம், கைலாச யாத்திரை.
6. ‘மீன் துடிக்கிறபடி’ என்றது,
‘மீன் துடித்தல் போல நாக்குத் துடிக்கிறபடி’ என்றவாறு.
7. பெரிய திருமொழி. 1.
7 : 8.
|