எங
இரண்டாந்திருவாய்மொழி - பா. 11 |
53 |
எங்களை முன்னே படைத்து,
பின்னர் மற்றைப்பொருள்கள் எல்லாவற்றையும் படைத்தாய். இறைவ - இறைவனே!’ என்பார்கள்.
‘இங்ஙனே சொல்லுகிறவர்கள்தாம் யார்? என்னில், வெள் ஏறன் நான்முகன் இந்திரன் வானவர் -
சிவன் முதலானோர். ‘ஆயின், கடவுளை வணங்குகின்றவர்கள் வாகனத்தோடு வருதல் பொருந்துமோ?’
எனின், இராஜசேவை செய்வார் தத்தமது அடையாளங்களோடே சட்டையும் பிரம்புமாய்ச் சேவிக்குமாறு
போன்று, இவர்களும் தத்தம் அடையாளங்களோடே வந்து சேவிக்கிறார்கள். 1‘இரவியர்
மணிநெடுந்தேரோடும் இவரோ? இறையவர் பதினொரு விடையரும் இவரோ?’ மருவிய மயிலினன் அறுமுகன்
இவனோ?’ என்றார் தொண்டரடிப்பொடிகள். புள் ஊர்தி கழல் பணிந்து ஏத்துவர் - சர்வேஸ்வரன் பெரிய
பிராட்டியாரும் தானுமாய் இருக்கிற இருப்பில் புக முடியாமையாலே, திருப்பாற்கடலுக்கு இவ்வருகே கூப்பிட்டால்,
இவர்கட்குக் காட்சி கொடுக்கைக்காகத் திருவடி திருத்தோளில் ஏறிப் புறப்படுவான், அப்பொழுது
2ஆட்டத்து வெளியில் யானைக்காலில் துகையுண்ணா நிற்பார்கள்.
(10)
132
ஏத்த ஏழுலகும்
கொண்ட கோலக்
கூத்தனைக்
குருகூர்ச் சடகோ பன்சொல்
வாய்த்த ஆயிரத்
துள்இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு
இல்லைஓர் ஊனமே.
பொ - ரை :
‘ஏழ் உலகங்களிலும் உள்ளவர் எல்லாரும் ஏத்த, எல்லா உலகங்களையும் தன் திருவடியால் அளந்துகொண்ட
அழகு பொருந்திய கூத்தன் விஷயமாக, திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபரால் அருளிச்செய்யப்பட்ட
பொருந்திய ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் பொருள் உணர்வோடு கற்று
உணர்ந்து துதிக்க வல்லவர் ஒரு குற்றமும் இலர் ஆவர்,’ என்பதாம்.
வி - கு :
‘ஏத்த, கொண்ட கூத்தன்’ என்க. வல்லவர் - வினையாலணையும் பெயர். ஊனம் - குற்றம். குற்றமாவது,
ஒப்பாரும் மிக்காரும் இலாத
_____________________________________________________________
1. திருப்பள்ளியெழுச்சி.
2. ஆட்டத்து வெளி - வையாளி
வெளி. இராசாக்களுடைய வையாளிவெளியிலே
யானைக்காலிலே சிற்றரசர்கள் அபிமானம் அற்றுத் துகையுண்பார்கள்;
அப்படியே,
இங்கும் அபிமானம் அற்றவராய்த் துதிசெய்வார்கள் என்றபடி. ‘புள்ளூர்தி கழல்
பணிந்தேத்துவரே’
என்று அருளிச்செய்தனால் இக்கருத்தை உரையாசிரியர்
வெளியிடுகிறார்.
|