இ
54 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
இறைவனை மற்றைத் தேவர்கட்கு
ஒப்ப நினைத்தல்; அன்றி, அவனைக் குறைய நினைத்தல்; அன்றி, அவனைக்காட்டிலும் மற்றைத் தேவர்களை
உயர்வாக நினைத்தல்; ஆக, இவற்றால் உளவாய குற்றம்.
ஈடு :
முடிவில், ‘இத்திருவாய் மொழியைக் கற்று உணரவல்லவர்கட்கு, மற்றைத் தேவர்களை இறைவர்களாக நினைத்தலாகிய
குற்றம் இல்லை,’ என்கிறார்.
ஏழ் உலகம் ஏத்த
ஏழ் உலகும் கொண்ட - 1‘வானத்திலும் பூமியிலும் உள்ள அமரர் கூட்டமும், அவ்வாறே
மனிதர்களும், அங்கேயே சஞ்சரிக்கிற தேவர்களும் துதிக்க, இவ்வுலகங்களை எல்லாம் தன் அடிகளால்
அளந்தவன் எவனோ, அவ்விறைவனான திரிவிக்கிரமன், என்னுடைய மங்களங்களின் விருத்தியின்
பொருட்டு எனக்கு எப் பொழுதும் அருள் புரியவேண்டும்,’ என்கிறபடியே, ஏத்தித் துதிக்க, அம்மகிழ்ச்சியாலே
எல்லா உலகங்களையும் திருவடியின்கீழே இட்டுக் கொண்ட. கோலக் கூத்தனை - திருவுலகு அளத்தருளினபோது
வல்லார் ஆடியது போன்று இருந்தானாதலின் ‘கூத்தனை’ என்றும், அப்போதைய வடிவழகின் மிகுதியினைக்
கூறுவார், ‘கோலக் கூத்தனை’ என்றும் அருளிச்செய்கிறார். இதனால், இந்திரன் இழந்த
தனது ராஜ்யத்தைப் பெறும் பொருட்டு வணங்கியதுபோன்று, இவர் ஒரு பயனைக் கருதி வணங்குமவர் அல்லர்
என்பதூஉம், அவ்விறைவனுடைய வடிவழகினை அனுபவித்தலே இவர்க்குப் பேறு என்பதூஉம் போதரும்.
குருகூர்ச் சடகோபன்
சொல் - 2ஆப்திக்கு இன்னார் கூறியது என்ன வேண்டுதலின், ‘குருகூர்ச் சடகோபன்’
என்கிறார். இதனால், வேதாந்தத்தைக் காட்டிலும் ஆழ்வாரிடத்தில் பிறந்த திருவாய்மொழிக்குள்ள
உயர்குடிப்பிறப்பின் சிறப்பினைக் கூறியபடி வாய்ந்த ஆயிரம் இத்தனைபோது இவர் கூறி வந்த பரம்பொருள்
நேர்பட்டாற்போலேயாயிற்று இப்பிரபந்தமும் நேர்பட்டபடி. அன்றி,
_____________________________________________________________
1. விஷ்ணு தர்மம்.
2. ‘இந்நான்கும் உணர்ந்த
வழியும், கற்றுவல்ல சான்றோரல்லாராற் செய்யப்பட்ட நூலாயின்,
கூறியது கூறல் முதலிய குற்றமுடைத்தாமன்றே?
எனவும், ‘கற்று வல்ல சான்றோரும்
மற்றோர் கோட்பாடு பற்றிச் செய்யின் முனைவன் நூலோடு முரணுமன்றே?,
எனவும்
ஐயுற்று ஊக்கஞ் செல்லாமையின், அவ்வையம் நீக்குதற்பொருட்டு ஆக்கியோன் பெயரும்
நூற்பெருமையும்
உணர்தல் வேண்டும்,’ என்பது நன்னூல் விருத்தியுரை.
|