1வ
இரண்டாந்திருவாய்மொழி - பா. 11 |
55 |
1வாச்சியத்திற்காட்டில்
வாசகம்நேர்பட்டபடி என்றுமாம். அதாவது, விஷயத்தை உள்ளபடி பேசவற்றாய் இருக்கை. இவை பத்து
உடன் ஏத்த வல்லவர்க்கு - இத்திருவாய்மொழியை மனமாரத் துதிக்க வல்லவர்கட்கு. ஓர் ஊனம் இல்லை
- இவ்வாத்துமாவுக்கு ஊனமாவது இறைவர் அல்லாதாரை இறைவர் என்று எண்ணுதலும், இறைவனை இறைவன் என்று
எண்ணாமையும். இப்படி வரக்கூடிய ஊனம் இது கற்றார்க்கு இல்லை.
முதற்பாட்டில், மேல்
பரக்க அருளிச்செய்கிற இத்திருவாய் மொழியின் அர்த்தத்தைத் தொகுத்து அருளிச்செய்தார்.
இரண்டாம் பாசுரம் முதல், துக்கத்தைப் போக்குமவன் ஆதலானும், சீலவான் ஆதலானும், சுகுமாரன்
ஆதலானும், தாமரைக்கண்ணன் ஆதலானும், ஆபத்சகன் ஆகையானும், அகடிதகடநா சமர்த்தன் ஆதலானும்,
படைத்தல் காத்தல்களைச் செய்கையாலும், அழித்தலைச் செய்கையாலும், ஈஸ்வர அபிமானிகளாய்
இருக்கிறவர்களுடைய துதிகள் முதலியவைகளாலும், இப்படிப் பல வகைகளாலே அவனுடைய பரத்துவத்தை
அருளிச்செய்து, இது கற்றார்க்குப் பலம் சொல்லித் தலைக்கட்டினார்.
(11)
திருவாய்மொழி நூற்றந்தாதி
திண்ணியதாம் மாறன்
திருமால் பரத்துவத்தை
நண்ணிஅவ தாரத்தே
நன்குரைத்த - வண்ணமறிந்து
அற்றார்கள் யாவர்
அவரடிக்கே ஆங்கவர்பால்
உற்றாரை மேலிடாது
ஊன்.
(12)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
________________________________________________________
1. வாச்சியம் -சொல்லின் பொருள். வாசகம் - சொல்.
|