மூன
56 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
மூன்றாந்திருவாய்மொழி
-‘ஊனில்வாழ்’
முன்னுரை
ஈடு :
‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியில் உண்டான
துன்பமெல்லாம் தீரும்படி வந்து கலந்த கலவியினை அருளிச்செய்கிறார். இத்திருவாய்மொழியில்.
‘ஆயின், இது, ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியினைச் சார்ந்தன்றோ இருத்தல் வேண்டும்?’
எனின், ஆம்; முதல் திருவாய்மொழியின் ஈற்றுப் பாசுரத்தில் இறைவனுடைய முதன்மையினை அருளிச் செய்தாராயின்,
அது சம்பந்தமாகத் தோன்றிய அம்முதன்மையினை இரண்டாந்திருவாய்மொழியில் அருளிச்செய்தார்;
பின்னர், துன்பம் எல்லாம் தீரும்படி வந்து கலந்த கலவியினை அருளிச்செய்கிறார் இத் திருவாய்மொழியில்.
ஆக, இரண்டாந்திருவாய்மொழி, நடுவில் 1பிராசங்கிகமாக வந்ததித்தினை.
2தாம்
பெற்ற பேற்றின் கனத்தைப் பார்த்தார்; அது அளவு இறந்ததாய் இருந்தது; தமது முயற்சி காரணமாக
வந்ததாயின் அளவுபட்டு இருக்கும்; எல்லாம் வல்ல இறைவன் காரணமாக வந்த தாகலின் அவ்வின்பம்
கனத்திருந்தது. மற்றும், தாம் அநுபவித்த அநுவபத்துக்குள்ளே 3எல்லா ரசங்களும் உண்டாய்
ஒப்பும் உயர்வும் அற்றதாய் இருந்தது; ‘இத்தகைய பேற்றுக்கு உசாத்துணையாவார் யார்?’ என்று
பார்த்த இடத்தில் சம்சாரத்திலே ஆள் இல்லாமையாலே, அவன் தன்னோடு ஒக்கப் 4பிராப்பியருமாய்
அவனை நித்தியாநுபவம் பண்ணாநிற்பாருமாய், பகவானுடைய அநுபவத்துக்குத் தேசிகருமாய் இருக்கிற நித்திய
சூரிகள் திரளிலே சென்று புக்கு ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொண்டு அநுபவிக்கப்
_____________________________________________________________
1. பிராசங்கிகம் - ஒரு காரணமாக
இடையிலே தோன்றியது (இடைப்பிற வரல்).
2. ‘தாம் பெற்ற பேற்றின்’
என்றது முதல், ‘இத்திருவாய்மொழியினைத் தலைக்ககட்டுகிறார்’
என்றது முடிய, இத்திருவாய்மொழியின்
பொருளைச் சுருங்க அருளிச்செய்கிறார்.
3. இத்திருவாய்மொழியின்
முதற்பாசுரத்தை நோக்கி ‘எல்லா ரசங்களுமுண்டாய்’ என்கிறார்.
4. பிராப்பியர் - அடையத்தக்கவர்.
|