பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

New Page 1

மூன்றாந்திருவாய்மொழி - முன்னுரை

57

பெறுவது எப்பொழுதோ?’ என்னும் 1அநவாப்தியோடே இத்திருவாய் மொழியினைத் தலைக்கட்டுகிறார். ‘ஆயின், ‘வாயும் திரை உகளும்’ என்ற திருவாய்மொழியிற்கூறியது போன்று, பிரீதிக்கும் பறவை முதலியவற்றைத் தேடாது, ஈண்டு நித்திய சூரிகளைத் தேடுவதற்குக் காரணம் என்னை?’ எனின், ‘வாயும் திரை உக’ளில் ஆற்றாமைக்கு அறிவு நடையாடாத திரியக்குகளையும் 2அசேதநங்களையும் சேர்த்தார்; இங்கு, கலவியால் வந்த பிரீதிக்கு இயற்கை அறிவையுடைய நித்தியசூரிகளைத் தேடுகிறார்.

    இறைவன் ஆழ்வாரோடு கலந்த கலவி, பெருமாளும் பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி 3கலந்த கலவியைப் போன்று இருந்தது.

_____________________________________________________________

1. அநவாப்தி -எண்ணம் முற்றுப்பெறாத தன்மை.

2. அசேதனம் - அறிவற்ற பொருள்; சேதனம். அறிவு.

3. இவ்விடத்தில், ஸ்ரீராமாயணச் சுலோகத்திற்கு வியாக்கியாதா அருளிச்செய்த பொருள்:
  ராமஸ்து - பெருமாளும் பிராட்டியும் ஏக தத்துவம் என்னலாம்படி கலந்த கல்வியைச்
  சொல்லுகிறது. ‘பித்ரு ஸூஸ்ரூஷண பரரானார், தர்மங்களைப் பிரவர்த்திப்பித்தார், தேவ
  சமாராதளம் பண்ணினார்’ என்றாயிற்றுச் சொல்லிக் கொண்டு போந்தது: இப்படிப் போந்த
  இவர், இப்போது, ‘வாத்ஸ்யாயநங் கற்றுக் காமதந்த்ரமேயோ நடத்திப் போந்தது?’
  என்னும்படி வேறுபட்டார். சீதயா ஸார்த்தம் 5 பரமபதத்திலே செவ்வியோடே வந்தவளும்
  பிற்பாடையாம்படி போக ஸ்ரோதஸ்ஸிலே முற்பாடரானார். விஜஹார - இப்படிப்
  பரிமாறச் செய்தேயும் போக உபோத்காதத்துக்கு அவ்வருகு பட்டிலர். பஹூந் ருதூந் -
  ‘பஹூந் சம்வத்ஸாரந்’ என்னாதொழிந்தது, ‘ அவ்வோ கால விசேஷங்களுக்கு அடுத்த
  போக உபகரணங்களைக்கொண்டு புஜித்தார்’ என்னுமிடம் தோற்றுகைக்காக. மனஸ்வீ -
  ம்ஸ்லேஷத்தில் பிராட்டி கோலின அளவுக்கு அவ்வருகு பட்டுப் பரிமாறினார். தத் கத:-
  தஸ்யாம் கத: - சாதி குணங்கள் திரவியத்துப் பிரகாரமாய்ப் பிரிக்க ஒண்ணாதபடியாய்
  இருக்குமா போலே, பிரிக்க ஒண்ணாதபடி ஒரு நீராகக் கலந்தபடி. தஸ்யா நித்யம் ஹ்ருதி
  ஸமர்ப்பித : - இவர் உயர்த்தியை அறிந்திருப்பாள் ஒருத்தி ஆகையாலே ‘அப்பெரியவன்
  இப்படித் தாழ விடுவதே!’ என்று அச் செயலிலே தன் நெஞ்சு துவக்குப்பட்டு ‘அது அது’
  என்று கிடக்கு மாயிற்று. அப்படியாயிற்று இங்குக் கலந்த கலவிதான்.