பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

1 3 3

58

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

133

        ஊனில்வாழ் உயிரே! நல்லை, போ! உன்னைப்பெற்று
        வானுளார் பெருமான் மதுசூதன் என்அம்மான்
        தானும்யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்தொழிந்தோம்
        தேனும்பாலும் நெய்யும் கன்னலும் அமுதும்ஒத்தே.

    பொ - ரை : சரீரத்தில் வசிக்கிற மனமே! நீ மிகவும் நல்லை நல்லை! உன்னை நான் துணையாகப் பெற்ற காரணத்தால், நித்தியசூரிகட்குத் தலைவனும், மது என்னும் அரக்கனைக் கொன்றவனும், என்னை அடிமை கொண்டவனுமான இறைவனுக்கு யானும் கலந்த கலவியிலே எல்லாச் சுவைகளும் உண்டாகுமாறு, தேனும் பாலும் நெய்யும் கருப்பஞ்சாறும் அமுதுமாகிய பொருள்கள் தம்மில் கலந்தாற்போன்று கலந்தோம்.

    வி-கு : ‘ஊன்’ என்பதில் னகரம் சாரியை, ‘ஊ’ என்பதே பெயர், ஊ - தசை. ‘கலந்தொழிந்தோம்’ என்பது, ஒரு சொல் நீர்மையது; தொடர்மொழியாகக் கோடலுமாம்.

    ஈடு : முதற்பாட்டில், 1இராச்சியத்தை இழந்த இராஜபுத்திரனை ஒருவன் இராச்சியத்திலே பிரவேசிப்பித்தால், ‘இவனாலே நாம் இப்பேறு பெற்றோம்’ என்று, அவன் அவனைக் கொண்டாடுமாறு போன்று, ‘கைங்கரிய சாம்ராச்சியத்திற்கு இட்டுப் பிறந்த வைத்து நெடுநாள் அதனை இழந்து கிடக்க, இந்நெஞ்சு அன்றோ இப்போது அதனைத் தந்தது?’ என்று தம் திருவுள்ளத்தைக் கொண்டாடுகிறார்.

    ஊனின் வாழ் உயிரே - சரீரத்திலே வசிக்கிற உயிரே! இவ் விளியால், ‘பரமபதத்தைப் பெற்று அங்குப் பல வகை வடிவை உடையனாகி அனுபவிக்கிற இடத்திலேயோ நீ உதவி செய்தாய்? 2எழுவகைத் தாதுக்களாலான சரீரத்திலே நித்தியசூரிகள் அனுபவிக்கும் அனுபவத்தை அன்றோ உதவினாய்?’ என்ற தொனிப்பொருள் தோன்றும், இனி, ‘ஊனில் வாழ் உயிரே’ என்பதற்குச்

_____________________________________________________________

1. தம் திருவுள்ளத்தைக் கொண்டாடுதற்குரிய காரணத்தை ஓர் எடுத்துக்காட்டு மூலம்
  விளக்குகிறார் முதலில்.

2. ஏழுவகைத் தாதுக்கள் தோல், இரத்தம், இறைச்சி, மேதை, எலும்பு, மச்சை, சுவேதநீர்
  என்பன