New Page 1
மூன்றாந்திருவாய்மொழி - பா. 1 |
59 |
‘சரீரத்தைப் பற்றி
அனுபவிக்கிற அனுபவத்தையன்றி, அதற்கு அப்பால் வேறு ஒன்றனையும் அறியாதே வாழ்ந்து போன உயிரே!’
என்று பொருள் கூறலுமாம். இவ்விளியால், ‘நெடுநாள் இவ்வுலக இன்பங்களை நுகர்ந்து போந்த நீ,
அவ்வுலக இன்பத்துக்குக் கைதர நிற்பதே!’ என்ற தொனிப்பொருள் தோன்றும். இப்பொருளில் வாழ்தல்
- அனுபவித்தல். ஈண்டு ‘உயிர்’ என்றது, மனத்தினை. ‘ஆயின், மனத்தை ‘உயிர் ‘ என்பான் என்?’
எனின், உயிருக்கு 1தர்ம பூத ஞானம் நித்தியமாய் இருக்கவும், 2’மனிதனுக்கு
மனமே பந்தங்கட்கும் மோக்ஷத்திற்கும் காரணம்’ என்கிறபடியே, ‘பந்த மோக்ஷங்களுக்குக் காரணம்
மனமே,’ என்கிற பிரபதாந்யத்தைப் பற்ற ‘உயிரே’ என்று ஆத்துமாவை விளிக்குமாறு போன்று
விளிக்கிறார். 3‘நல்லை போ - நல்லை வா’ என்றபடி. இனி, ‘நல்லை நல்லை!’ என்று
கொண்டாடுகிறார் என்று கோடலுமாம். அன்றி ‘போ’ என்பது, விளியாகவுமாம்.
‘நடுவே என்னைக்
கொண்டாடுகிறது என்?’ என்ன, ‘உன்னைப் பெற்று - பிறப்பிற்குக் காரணமாகப் போந்த உன்னை
மோக்ஷத்திற்குக் காரணமாகப் பெற்று. அதாவது, இறைவனும் என்றும் உளன்; அவன் சம்பந்தமும் அநாதி;
அவன் 4எதிர் சூழல் புக்குத் திரியா நிற்கவும், நீ அவனுக்கு முகங்காட்டாமையால்
அன்றோ நெடுங்காலம் இழந்திருந்தது? இன்று நீ முகங்காட்டினமையால் அன்றோ இப்பேறு பெற்றது?’
என்றபடி. ‘ஆயின், நீர் பெற்ற பேறு எது? என்ன, சொல்லுகிறார் மேல்: வானுளார் பெருமான் மதுசூதன்
என் அம்மான் தானும யானும் - தான் அயர்வறும் அமரர்கள் அதிபதியாய் இருந்தும் அவதரித்து,
மதுவாகிற அசுரனைப்போக்கியது போன்று, என்னுடன் கலப்பதற்குத் தடைகளாய் இருந்தனவற்றைப்
போக்கி என்னைத் தோற்பித்துத் தன் பக்கலிலே கைங்கரியத்திலே மூளும்படி செய்த
_____________________________________________________________
1. தர்மபூதஞானம் - தர்மமான
அறிவு; அதாவது, ஆத்துமாவினைப் பற்றி இருப்பதாய்,
உலகத்துப் பொருள்களை அறிதற்குக் காரணமாயுள்ள
ஞானம்.
2. ஸ்ரீ விஷ்ணு புரா. 6. 7 :
28.
3. ‘நல்லை போ’ என்பதற்கு
மூன்று பொருள் அருளிச்செய்கிறார். மூன்றாவது பொருளில்
‘ஹொ’ என்ற வடசொல்லின் விகாரம்;
‘ஹொ’ என்பது, வடமொழியில் விளிப்பொருளைப்
பயப்பது என்பர்.
4. திருவாய். 2. 7 : 6
எதிர் சூழல் புகுதல் - ஒருவனைப் பிடிக்க நினைத்தவன் அவன்
போம்
வரம்புக்கு எதிர் வரம்பே
வருமாறு போன்று, இவர் பிறந்த பிறவிகள் தோறும்
இறைவனும் எதிரே பிறந்து வருதல். சூழல் - பிறவி.
|