உய
|
68 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
உயிருக்குள் உயிராக
இருப்பவனும் நீ ஆவாய்; என்னால் கொடுக்கப்பட்ட உயிர் யாருடையது? அவ்வுயிரை உனக்குக்
கொடுக்கிற நான் யார்? கொடுத்த நீயே கொடுக்கப்பட்ட பொருளினை உனக்கு உரிமையாக்கிக்கொண்டாய்’
என்றவாறு.
வி -கு :
கைம்மாறு - பிரதியுபகாரம். ‘கைம்மாறு வேண்டா கடப்பாடு’ என்பது திருக்குறள். ‘தந்தொழிந்தேன்’
ஒரு சொல். மீள்வது தொழிற்பெயர், உண்டே -ஏகாரம், எதிர்மறை. ‘ஆர்’ என்பது, வினா வினைக்குறிப்பு
முற்று. இது, ‘யார்’ என்பதன் மரூஉ; ஈண்டு அஃறிணைக்கண் வந்தது.
‘ஊதைகூட் டுண்ணும்
உகுபனி யாமத்துஎம்
கோதைகூட்டு உண்ணிய
தான்யார்மன் -போதெல்லாம்
தாதொடு தாழுந்தார்க்
கச்சி வளநாடன்
தூதொடு வாராத வண்டு?’
என அஃறிணைக்கண்
வருதலும், ‘நானார்’ என்னுள்ளமார்?’ என ‘யார்’ என்பது ‘ஆர்’ என மரீஇ வருதலும் புதியனபுகுதலாம்
என்பது நன்னூல் விருத்தி, சூ. 349.
ஈடு :
நான்காம் பாட்டு. 1‘வைத்தாயால்’ என்று அவன் செய்த உபகாரத்தைச் சொல்லி,
‘இங்ஙனே கிடந்து நெஞ்சாறல்பட நில்லாதே, பிரதியுபாகாரமாக உம்மதாய் இருப்பது ஒரு பொருளைக்
கொடுத்து நெஞ்சாறல் தீர மாட்டீரோ?’ என்ன, ‘அப்படியன்றோ செய்வது?’ என்றுஅவன் திருவடிகளிலே
ஆத்தும சமர்ப்பணத்தைப் பண்ணி, தகழிவிரக்கங்கொள்ளுகிறார்.
எனது ஆவியுள் புகுந்த
- அநாதிகாலம் சமுசாரத்திலே வாசனை பண்ணிப் போந்த என்னுடைய ஆத்தும வஸ்துவிலே அன்றோ வந்து
கலந்தான்? வசிஷ்டன் சண்டாளச் சேரியிலே புகுந்தது போன்று தம்மைச் சொல்லுகிறார்
‘எனதாவி’ என்று; 2‘நீசனேன்’ என்று அன்றோ தம்மை அநுசந்திப்பது? அவ்வாறு கலக்கும்
இடத்திலும் 3கடக்க நின்று சில போக மோக்ஷங்களைத் தந்து போதல் அன்றி,
_____________________________________________________________
1. ‘எனதாவி தந்தொழிந்தேன்,
எனதாவி யார்? யானார்?’ என்ற பதங்களைக் கடாஷித்து
அவதாரிகை அருளிச்செய்கிறார்.
2. திருவாய் 3. 3 : 4
3. கடக்க நின்று சில போகத்தைக்
கொடுத்தலாவது, தான் பிராப்பியன்
அன்றிக்கேயொழிகை. கடக்க நின்று மோஷத்தைக் கொடுத்தலாவது,
‘மோக்ஷயிஷ்யாமி,’
‘நித்ய கிங்கரோ பவிஷ்யதி’ என்று புருஷார்த்தப் பிரதானத்தைச் சங்கற்பித்து,
அந்த
ரசத்தை அனுபவிப்பியாமலிருக்கை.
|