பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

1

மூன்றாந்திருவாய்மொழி - பா. 4

69

1‘எல்லாம் தன்னுளே கலந்தொழிந்தோம்’ என்னும்படி கலந்தானாதலின், ‘உள்கலந்த’ என்கிறார். பெருநல் உதவிக் கைம்மாறு - இப்பெரிய உபகாரத்துக்குப் பிரிதியுபகாரமாக; உதவி, நல்லுதவி, பெருநல்லுதவி: உதவியாவது, உபகரித்தல். நல்லுதவியாவது, 2பச்சை கொள்ளாதே உபகரித்தல். பெருநல்லுதவியாவது, தன் பேறாக உபகரித்தல். எனது ஆவி தந்தொழிந்தேன் - என்னுடைய ஆத்மவஸ்துவைத் தேவரீருடைய திருவடிகளிலே சமர்ப்பித்தேன். ‘அழகிது; இதுதான் 3எத்தனை குளிக்கு நிற்கும்?’ என்றான் ஈஸ்வரன். இனி மீள்வது என்பது உண்டே - 4சத்தோதஸாகமாகத் தந்தேன். ‘அழகிது, நீர்தாம் யாரதை யாருக்குத் தந்தீர்? ஆராய்ந்து பார்த்தீரோ!’ என்றான் ஈஸ்வரன். ஆராய்ந்து பார்த்தவாறே, அவனுடைய பொருளை அவனுக்குக் கொடுத்ததாய் இருந்தது. ‘எனது ஆவி ஆவியும் நீ’ என்கிறார்; அதாவது, ‘என் ஆத்துமாவுக்கு அந்தாரத்துமாவாய்ப் புகுந்து நின்றாயும் நீயாய் இருந்தாய்,’ என்றபடி.

    ‘பகவானுக்கு உரிமைப்பட்ட பொருளை நெடுநாள் ‘நம்மது’ என்றிருந்து, இத்தை இன்று அவன் பக்கலிலே சமர்ப்பித்தோம்; முற்றறிவினான சர்வேஸ்வரன் என் நினைந்திருப்பான்?’ என்று தாம் அதனையறிந்து அதற்கு நாணுகிறார், ‘எனது ஆவி யார்? யானார்?’ என்று. ‘நன்று; ஆத்தும சமர்ப்பணம் செய்யாவிடில் 5சர்வமுத்தி பிரசங்கமாம்; சமர்ப்பிக்கில் அவனுடைய பொருளை அவனுக்குக் கொடுத்ததாம்; அப்படியாயின், செய்ய அடுப்பது என்?’ என்னில்,

_____________________________________________________________

1. திருவாய். 2. 3 : 1

2. பச்சை - பிரதியுபகாரம்.

3. ‘எத்தனை குளிக்கு’ என்றது, குளித்தல் - நீராடல்; ‘நாலு ஆறு குளி பர்யந்தம்
  புஷ்பாங்கராகாதி பரிமளம் இருக்குமாறு போன்று, இதுவும் எத்தனைக்காலம் இருக்கும்?’
  என்றபடி.

4. சத்யோ தசாகம் - பத்து நாள்களும் இப்பொழுதே முடிவுற்றன. அதாவது, உலகத்துப்
  பொருள்களை விற்றல் வாங்கல் செய்யுமிடத்து, ‘கொடுத்த பொருளைப் பெறுவதாயின்,

 
பத்து நாள்களுக்குள் பெறுவேன்; இன்றேல், கொடுத்த பொருள் உன்னுடையதே;
  என்னுடையதன்று,’ என்று கூறப்படுகிற நியதியுண்டு; ‘அந்நியதியும் என் விஷயத்தில்
  இன்றே சென்றுவிட்டதாகக் கொடுத்தேன்,’ என்பதாம்.

5. சர்வ முத்தி பிரசங்கம் - எல்லாரும் மோக்ஷத்தைப் பெறுதற்கு உரியவர் என்று
  போதருதல்.