ஸ்ரீசட
86 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
ஸ்ரீசடகோபர். ஜனஸ்தானம்
அடியறுப்பு உண்ட பின்பு தண்ட காரண்யத்தில் முனிவர்கள் குடி ஏறியது போன்று, ‘வாயும் திரையுகளும்’
என்ற திருவாய்மொழியில் உண்டான நிலையினின்றும் தப்பிய ஆழ்வாரைக் காணவேண்டும் என்னும் பேரவாவோடு
ஸ்ரீவைஷ்ணவர்கள் அடையத் திரண்டு வந்து சேர்ந்தார்களாதலின், ‘குழாங்கொள் தென்குருகூர்’
என்கிறார். 1‘நல்லார் நவில் குருகூர்’ அன்றோ? சத்துகள் இருந்த இருந்த இடங்களிலே
வாய் புலற்றும்படியான தேசமானால், அத்தேசத்திலுள்ளார் திரளச்சொல்லவேண்டா அன்றோ? தெரிந்து
உரைத்த குழாம் கொள்ஆயிரத்துள் - உள்ளபடி அநுசந்தித்துச் சொன்ன பத்துப்பாட்டு ஒரு திருவாய்
மொழியாய், பத்துத் திருவாய்மொழி ஒரு பத்தாய், இப்படிப் பத்துப் பத்தான ஆயிரம். திரண்ட
ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு ஜீவனமாக இவை இருத்தலின், ‘குழாம் கொள் ஆயிரம்’ என்கிறார்.
‘ஆயின் திருவாய்மொழி ஜீவனம் ஆகுமோ?’ எனின், 2‘தொண்டர்க்கு அமுது உண்ணச்
சொன்மாலைகள் சொன்னேன், அண்டத்து அமரர் பெருமான் அடியேனே’ என்பது இவருடைய திருவாக்கு. இவை
பத்தும் உடன் பாடி - இவை பத்தையும் பொருள் உணர்ச்சி நிறைந்த கருத்தோடு பாடி. குழாங்களாய்
-என்னைப் போன்று பருகிக் களித்தேனே’ என்று கூறி, குழாம் தேட இராதே, முற்படவே திரளாக இழியப்
பாருங்கள். அடியீர் உடன் கூடி நின்று ஆடுமின் - அவன் பக்கலிலே 3நிக்ஷிப்தபரராய்
இருக்கிற நீங்கள் 4நால்வர் இருவர் இங்கிருக்குமெ 5நான்கு நாளும்
தள்ளத்
_____________________________________________________________
1.
திருவிருத்.
100
2.
திருவாய்மொழி
9. 4 : 9
3.
நிக்ஷிப்தபரர்
-பாரத்தை இறைவனிடத்தில் ஒப்படைத்தவர்.
4. அனுகூலர் கிடையாமையாலே
‘நால்வர் இருவர்’ என்கிறார்; நம்பிள்ளை நஞ்சீயரைப்
பார்த்து, ‘இதர உபாயங்களுக்கு அனுஷ்டாதாக்கள்
பலராய் இருக்க, இதற்கு
அநுஷ்டாதாக்கள் மிகச் சிலராய் இருத்தற்குக் காரணம் யாது?’ என்று கேட்க,
‘உலகத்தில்
இருந்ததே குடியாக அனைவரும் சமுசாரிகளாக இருக்க, அதில் நாலிரண்டுபேர் உத்தம
ஆஸ்ரமிகளானால்
சமுசாரிகளுக்கு ஒரு உத்கர்ஷமும் சந்யாசிகளுக்கு ஒரு அபகர்ஷமுமெ
உண்டோ? சுவர்க்க அனுபவத்துக்கு
ஜ்யோதிஷ்டோமமெ முதலிய யாகங்களைச்
சாதனமாகச் சாஸ்திரங்கள் விதிக்கின்றன; ஓர் ஊரில்
ஒரவனன்றோ யாகம் செய்தான்
என்று கேள்விப்படுகிறோம்? ஆதலால், இதற்கோ உமக்கு ஆள் பற்றப்
போகிறது?’
என்று நம்பிள்ளைக்கு நஞ்சீயர் அருளிச் செய்த விடை இங்கு நினைவு கூர்க.
5. காலத்தின் சிறுமை நோக்கி,
‘நான்கு நாளும்’ என்கிறார்; ‘சேர்ந்து நின்ற, இல்லினுள்
இரண்டு நாளைச் சுற்றமே இரங்கல் வேண்டா’
என்றார் திருத்தக்க தேவரும் (சிந்.
நாமகளிலம். 241)
|