தக
மூன்றாந்திருவாய்மொழி - பா. 11 |
87 |
தக்க அர்த்த காமங்களைப்
பற்றிச் ‘சீறு, பாறு’ என்னாதே, நம் பெரிய குழாத்திலே போய்ப் புகுமளவும்
ஒரு மிடறாய் அனுபவிக்கப்
பாருங்கள்.
(11)
முதற்பாட்டில், திருவுள்ளத்தைக்
கொண்டாடினார்; இரண்டாம் பாட்டில், அதனையும் இசைவித்த இறைவனைக் கொண்டாடினார்; மூன்றாம்
பாட்டில், தம் நெஞ்சிற்பட்டதோர் உபகாரத்தைக் கூறினார்; நான்காம் பாட்டில், அவ்வுபகாரத்திற்குக்
கைம்மாறாக ஆத்தும சமர்ப்பணம் பண்ணி அது தனக்கு வருந்தினார்; ஐந்தாம் பாட்டில், ‘எனக்குப்
பிரதம சுகருதமும் நீயேயான பின்பு உன் திருவடிகளைக் கிட்டினேனேயன்றோ?’ என்றார்: ஆறாம் பாட்டில்,
‘இன்றோ கிட்டிற்று? தேவரீர் எனக்கு விசேடமான திருவருள் பண்ணின அன்றே பெற்றேனே அல்லேனோ?’
என்றார்; ஆறாம் பாட்டில், ‘இன்றோ கிட்டிற்று? தேவரீர் எனக்கு விசேடமான திருவருள் பண்ணின
அன்றே பெற்றேனே அல்லேனோ?’ என்றார்; ஏழாம் பாட்டில் இனிமையை நினைத்து ‘உன்னைப்
பிரியில் தரியேன்’ என்றார்; எட்டாம் பாட்டில், யிப்படி எல்லையற்ற இனியனானவனை எளியது ஒரு
வரிகாலே அடையப் பெற்றேன்’ என்றார். இனி, ‘பல காலம் கூடிச் செய்து பெறக் கூடிய தவத்தின்
பலத்தை அவனைப் பின் சென்று மிக எளிதில் அடைந்தேன் என்கிறார்’ எனலுமாம். ஒன்பதாம் பாட்டில்,
‘என்னுடைய எல்லாத் துக்கங்களும் போகும்படி அனுபவித்துக் களிப்பார் திரளிலே போய்ப் புகப்பெறுவது
எப்போதோ?’ என்றார்; முடிவில்,’ இத்திருவாய்மொழியைக் கருத்தோடு கூடிக் கற்று, நான்கு நாளும்
நால்வர் இருவர் உள்ளார் கூடியிருந்து அனுபவிக்கப்பாருங்கோள்,’ என்றார்.
திருவாய்மொழி நூற்றாந்தாதி
ஊனம்அற வேவந்து உள்கலந்த
மால்இனிமை
யானது அனுபவித்தற்கு ஆம்துணையா
-வானில்
அடியார் குழாம்கூட
ஆசையுற்ற மாறன்
அடியா ருடன்நெஞ்சே!
ஆடு.
(13)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
|