பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
இரண்டாம் தொகுதி

88

திருவாய்மொழி - இரண்டாம் பத்து

நான்காந்திருவாய்மொழி - ‘ஆடியாடி’

முன்னுரை

    ஈடு : மேல் திருவாய் மொழியிலே, ‘பருகிக் களித்தேனே’ என்று ஆனந்தித்தவாய், ‘அதுதன்னைப் பாகவதர்களோடே உசாவித் தரிக்க வேண்டும்’ என்று பாரித்து, அதற்கு இவ்வுலகத்தில் ஆள் இல்லாமையாலே, நித்தியவிபூதியிலே நித்தியசூரிகள் திரளிலே போய்ப்புக்கு ஒருவருக்கு ஒருவர் அறிவித்துக்கொண்டு அனுபவிக்கக் கோலி, நினைத்த போதே அத்திரளிலே போய்ப் புக்கு அனுபவிக்கப் பெறாமையாலே மிகவும் துன்புற்றவராய், தம்முடைய நிலையைத் தம்மவர்களான ஸ்ரீவைஷணவர்கள் எம்பெருமானுக்கு அறிவிக்கிறபடியை 1அந்யாபதேசத்தாலே பேசுகிறார்.

    2‘அம் சிறைய மட நாராய்’ என்ற திருவாய் மொழியில் தூது விட 3க்ஷமர் ஆனார்; 4‘வாயுந் திரையுகளும்’ என்ற திருவாய்மொழியில், கண்ணாற்கண்ட பொருள்களடையப் பகவானைப் பெறாத காரணத்தால் நோவுபடுகின்றவாகக் கொண்டு அவற்றுக்குமாக நோவுபட க்ஷமர் ஆனார்; அவ்வளவு அன்றிக்கே, ஆற்றாமை கரை புரண்டு, தாமான தன்மை அழிந்து ஒரு பிராட்டி தசையை அடைந்தவராய், அது தன்னிலும் தம் தசையைத் தாம் வாய்விட்டுப் பேசமாட்டாமல் பக்கலில் உள்ளவர்கள் அறிவிக்க வேண்டும்படியாய், இருத்தல் நடத்தல் படுத்தல். முதலியவைகளில் ஒரு நியதியின்றி மகிழ்ச்சி அற்றவராய் நோவுபட, இப்பெண்பிள்ளை நிலையினை நினைந்த திருத் தாயார் இராமன் கிருஷ்ணன் முதலிய அவதாரங்களைச் செய்து, ஆசைப்பட்ட அடியார்களுடைய துன்பங்களையெல்லாம் போக்கக் கடவ நீர், உம்மை ஆசைப்பட்ட இவள் நோவுபடப் பார்த்திருப்பதே!’ என்று, எல்லா வகையாலும் அவனைக் கொண்டே பரிகரித்துக் கொள்ளும் குடியாகையாலே, அவன் திருவடிகளிலே போகட்டு

_____________________________________________________________

1. அந்யாபதேசம் -வேறு ஒன்றனைக் கூறுதல் ; அப்ரகிருதத்தைக் கூறிப் பிரகிருதத்தைக்
  குறித்தல்.

2. திருவாய் . 1. 4 : 1.

3. க்ஷமரானார் - பொறுத்துக் கொள்பவரானார்; க்ஷமம் - பொறுத்துக் கொள்ளும் தன்மை:
  ஆற்றலுடையவர் ஆனார் என்றபடி.

4. திருவாய். 2 : 1 : 1