இன
90 |
திருவாய்மொழி -
இரண்டாம் பத்து |
இனி, 1பகவானுடைய
பிரிவிலே உட்புக நின்றால் அன்றோ பாகவத விஸ்லேஷந்தான் தெரிவது?2’இலக்குமணா!
மகாத்துவமாவான பரதனோடும், வீரனான சத்துருக்கனனோடும், உன்னோடும் எப்பொழுது சேர்வேன்?’ என்கிறார்
பெருமாள். இங்கு, ஸ்ரீபரதாழ்வானோடும் சத்துருக்கனாழ்வானோடும் கூடப்பெறாத 3கிழிக்குறையாலே,
கூட நிற்கிற இளைய பெருமாளோடும் கூடிற்றாய்த் தோன்றவில்லை பெருமாளுக்கு; 4‘ஸ்ரீராபிரான்,
குகனைச் சேர்ந்தார்; அதனால், இலக்குமணனோடும் பிராட்டியோடும் சேர்ந்தவரானார்’ என்கிறார்
வால்மீகி. இங்கு, கூடப்போன இளையபெருமாளோடும் பிராட்டியோடும் கூடிற்றாய்த் தோன்றியது,
5ஸ்ரீகுகப்பெருமாளோடு கூடின பின்பு அன்றோ? இப்படியே அன்றோ இறைவன் தனக்கும்
6அந்வய வியதிரேகங்கள் இருக்கும்படி. ஆக, அடியார்களுடைய சேர்க்கையை ஆசைப்பட்டுப் பெறாமையாலே
வந்த இழவு, பெற்ற பகவானுடைய சேர்க்கையையும் இழந்து அடியே பிடித்துப் பிரார்த்திக்க வேண்டும்
படியாய் வந்து விழுந்தது எனக் கோடலுமாம்.
_____________________________________________________________
1. ‘பகவானுடைய பிரிவிலே
உட்புக நின்றால் அன்றோ பாகவத விஸ்லேஷந்தான்
தெரிவது?’ என்றது, பாகவதர்களுடைய பிரவின்
விசயனமிகுதி தெரிவது; பெற்ற
பகவானுடைய சேர்க்கையும் போய் அதுவும் பிரார்த்திக்கும்படி உட்புக
நின்றாலிறே;
இல்லையாகில், உட்புக நின்றவராகையாலே, அது, இவர்க்குப் பகவத்
விஸ்லேஷபர்யந்தமாய்,
அவன் தன்னை அடியே பிடித்துக் கூப்பிடுகிறார் என்றவாறு.
விஸ்லேஷம் - பிரிவு. ‘ஆயின், பெற்றது
பெறாததாகத் தோன்றுமோ?’ எனின், அதனை
இரண்டு உதாரணமுகத்தால் விளக்குகிறார் மேல்.
2. ஸ்ரீராமா. ஆரண். 16 :
10.
3. கிழிக்குறை - நிறைந்திராமல்
குறைந்திருக்கிற பணப்பை. கிழி - பணப்பை. ‘வேண்டிய,
வேதங்கள் ஒதி விரைந்து ‘கிழி அறுத்தான்’
என்ற இடத்துக் ‘கிழி’ என்பது இப்பொருட்டு.
4. ஸ்ரீராமா. பால. 1 : 29
5. வேடர் தலைவனான குகனை.
‘குகப்பெருமாள்’ என்பது வைணவப் பெருமக்கள் வழக்கு.
6. ‘அந்வய வியதிரேகங்கள்’
என்பதற்குப் பொருள்: - ‘எது இருந்தால் எது இருக்குமோ,
எது இன்றேல் எது இராதோ’ என்பது. ‘யத்சத்வே
யத் சத்வம்; யதபாவே யதபாவ:’
என்பது வடமொழி வாக்கியம். இங்கு, ஸ்ரீராமபிரானுக்கு ஸ்ரீ குகப்பெருமாளுடைய
சேர்க்கை உண்டானதனால் இளையபெருமாளோடும் பிராட்டியோடும் சேர்ந்த
சேர்க்கையையும் அவர் உள்ளவரானார்.
ஸ்ரீ பரதாழ்வான சத்துருக்கனாழ்வான்
இவர்களுடைய சேர்க்கை இல்லாததனால், இளையபெருமாளுடைய சேர்க்கை
இருந்தும்
அவர் இல்லாதவரானார் என்க.
|