பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
101

றது, திருவேங்கடமுடையானை; ‘வட மா மலையுச்சியை’ என்பர் திருமங்கை மன்னன்.

    மூப்பு பிறப்பு இறப்பு ஓயும் - பிறப்பு முதுமை இறப்பு முதலானவைகள் ஓயும். ‘இப்போது ஓயும்’ என்கையாலே, இதுகாறும் அநாதி காலம் உச்சி வீடும் விடாதே போந்தது என்னுமிடம் தோன்றுகிறது. ‘பிணி வீயுமாறு செய்கின்றவனான திருவேங்கடத்துஆயன்’ என்னுதல்; ‘பிணி வீயுமாறு செய்கைக்காகத் திருவேங்கடத்திலே வந்து நிற்கிற ஆயன்’ என்னுதல். ‘இவர்கள் பிணியும் இங்ஙனே சென்றிடுவதாக என்று இருந்தானாகில், கலங்காப் பெருநகரத்தில் இரானோ? என்பார், ‘பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்தாயன்’ என்கிறார். ஈண்டுப் ‘பிணி’ என்கிறது, சரீர சம்பந்தங் காரணமாக வருகின்ற எல்லா நோய்களையும். ஆக, இதனால், துக்கத்தைப் போக்கும் தன்மையன் என்பதனைத் தெரிவித்தபடி. ‘முதலடியில், ‘ஓயும் மூப்புப் பிறப்பு இறப்பு’ என்றவர், மீண்டும், ‘பிணி வீயுமாறு செய்வான்’ என்பதற்குக் கருத்து என்?’ என்னில், ‘இவனுடைய இங்குத்தை துக்கத்தைப் போக்குகைக்காக’ என்கை; அவனே வந்து போக்கானாகில், இந்த 2எலி எலும்பனுக்குப் போக்கிக்கொள்ளப் போகாதேயன்றோ?

    நாள் மலராம் அடித்தாமரை - செவ்விப்பூவைத் தலையிலே வைத்தலைப் போன்றிருப்பது ஒன்றாதலின், ‘நாண்மலராம் அடித்தாமரை’ என்கிறார். ‘அவன் கால் காண, ‘மூப்புப் பிறப்பு இறப்பு’ என்கிற இவையெல்லாம் அழியும்’ என்றபடி. இதனால், ‘விரோதி போகைக்கு இவ்வேப்பங்குடிநீரை ஆயிற்றுக் குடிக்கச் சொல்லுகிறது என்கிறார்,’ என்றபடி. வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கு - இவை இரண்டும் உடலுக்கும் உபலக்ஷணமாய், ‘திருவடிகளை மனம் வாக்குக் காயங்களாலே அநுசந்திப்பார்கட்கு’ என்றபடி. வாயுள் வைக்கையாவது, 3‘ஓவாது உரைக்கு முரை’ என்கிறபடியே உரைத்தல். மனத்துள்

__________________________________________________ 

1. பெரிய திருமொழி, 7. 10 : 3.

      ‘நோவினையும் நோயினையும் நோய்செய் வினையினையும், வீவினையும்
  தீர்த்தருளும் வேங்கடமே’ என்றார் திவ்விய கவியும்.

2. ‘எலி எலும்பன்’ என்றது, ‘அற்ப ஆற்றலையுடையவன்’ என்றபடி.

3. முதல் திருவந். 95.