பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
102

New Page 1

வைக்கையாவது, மறவாதிருத்தல். இப்படி உறுப்புகட்கு அடைத்த காரியங்களைக் கொள்ளவே, சொரூபத்திற்கு விரோதியாய் வந்தேறியானவை தாமாகவே போம்.

    பிணி வீயுமாறு செய்வான் திருவேங்கடத்து ஆயனுடைய நாண்மலராம் அடித்தாமரை வாயுள்ளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கு மூப்புப் பிறப்பு இறப்பு ஓயும்.

(9)

254

வைத்த நாள்வரை எல்லை குறுகிச்சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணை யான்திரு வேங்கடம்
மொய்த்த சோலைமொய் பூந்தடந் தாள்வரை.

    பொ-ரை : படத்தையுடைய ஆதிசேஷனைப் படுக்கையாகவுடைய இறைவன் எழுந்தருளியிருக்கின்ற திருவேங்கடத்தினது மொய்த்த சோலைகளையும் நெருங்கிய பூக்கள் பொருந்திய தடாகங்களையுமுடைய திருத்தாள் வரையை, உங்கட்கு ஏற்படுத்திய ஆயுளின் முடிவில் எல்லையைச் சென்று குறுகி எய்த்து இளைப்பதற்கு முன்னர் அடைமின்.

    வி-கு : ‘சென்று குறுகி இளைப்பதன் முன் தாள்வரையை அடைமின்,’ என்க. பை - படம். தாள்வரை - மலையடிவாரம். இரண்டாமடியிலும் நான்காமடியிலும் யகரம் ஆசு எதுகையாய் வந்தது.

    ஈடு : பத்தாம் பாட்டு. 1ஆக, ‘திருமலையாழ்வார் எல்லார்க்கும் ஒக்க உத்தேஸ்யமான பின்பு எல்லாரும் ஒருசேரத் திருமலையாழ்வாரை அடைமின்,’ என்கிறார்.

    வைத்த நாள் வரை எல்லை குறுகிச்சென்று எய்த்து இளைப்பதன் முன்னம் அடைமினோ - சர்வேசுவரன் நியமித்து வைத்த ஆயுளின் முடிவான எல்லையைச் சென்று கிட்டி, ‘திருமலைக்குப்

____________________________________________________

1. ‘தாள்வரை அடைமினோ’ என்றதனைக் கடாக்ஷித்து அவதாரிகை
  அருளிச்செய்கிறார். ‘வானவர் வானவர் கோனொடும்’ என்றதனால் நித்திய
  சூரிகட்கும், ‘பரன் சென்று சேர் திருவேங்கடம்’ என்றதனால்
  சர்வேசுவரனுக்கும் உத்தேஸ்யமாயிருத்தல் கூறப்பட்டுள்ளதனால் ஈண்டு
  ‘எல்லார்க்கும் ஒக்க உத்தேஸ்யமான’ என்கிறார்.