பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
103

New Page 1

போக வேண்டும்’ என்னும் ஆசையும் மனத்தில் தொடர்ந்து கிடக்கவும் ‘பாவியேன் 1கரணபாடவ தசையுண்டாகப் பெற்றிலேன்’ என்னும் நிலை வருவதற்கு முன்னே செல்லுங்கள். ஆக, 2‘ஓ பிரமனே! திருமகள் கேள்வனை வணங்கும்பொருட்டு, கை கால் முதலிய உறுப்புகளுடன் கூடின விசித்திரமான இச்சரீரம் முற்காலத்தில் உண்டாக்கப்பட்டது’ என்கிறபடியே, ‘சர்வேசுவரன் இவ்வாத்துமாவிற்குச் சரீர சேர்க்கையைக் கொடுத்தது, நரகத்திற்குக் காரணமான விஷயங்கள் இருந்த இடம் தேடிப் போகைக்காக அன்று; திருமலைக்குப் போகைக்கு’ என்கிறார்.

    3‘ஐயர் சொல்லிற்றுச் செய்ய வேண்டுகையாலே பெருமாள் காடேற எழுந்தருளாநின்றார்; நானும் கூடச் சேவித்துப் போவேன்,’ என்ன, ‘அவர் காட்டிலே எழுந்தருளாநிற்கப் படை வீட்டிலே இருக்கைக்கோ, நான் உன்னைப் பெற்றது? நீ இப்படிச் செய்தாயாகில் நான் உன்னைப் பெற்ற பயன் பெற்றேனாகிறேன்; அவர்க்கு யாதொருபோது துணை வேண்டியிருந்தது, அப்போது நீ துணையாகைக்காகவன்றோ நான் உன்னைப் பெற்றது? நீ சினேகி

____________________________________________________

1. கரண பாடவம் - கரணங்களின் சத்தி.

2. விஷ்ணு தத்துவம்.

3. ஸ்ரீராமா. அயோத். 40 : 5. இச்சுலோகப்பொருளோடு

  ‘அன்னான் அவர்தங் தனஆ தரத்தோடும் ஏந்தி
   இன்னா இடர்தீர்ந் துடனே கெனஎம்பி ராட்டி
   சொன்னா லதுவே துணையா மெனத்தூய நங்கை
   பொன்னார் அடிமேல் பணிந்தான்; அவளும் புகன்றாள்.

  ‘ஆகாத தன்றா லுனக்கவ் வனம்இவ் வயோத்தி
   மாகாத லிராமன் நம்மன் னவன்வையம் ஈந்தும்
   போகா உயிர்த்தாயர் நம்பூங் குழற்சீதை என்றே
   ஏகாய் இனிஇவ் வயின்நிற் றலும்ஏதம் என்றான்.

  ‘பின்னும் பகர்வாள்: மகனே யிவன்பின்செல்; தம்பி
   என்னும் படியன்று; அடியா ரினில்ஏவல் செய்தி;
   மன்னும் நகர்க்கே இவன்வந் திடின்வா; அதன்றேல்
   முன்னம் முடிஎன் றனள்பால் முலைசோர நின்றாள்.’

  என்னும் செய்யுள்கள் (கம். அயோத். 150-152) ஒப்பு நோக்கத்தக்கன.