பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
104

தர

தர்கள் பக்கல் அன்பு உடையையன்றோ? ஆகையாலே, எல்லார்க்கும் வேர்ப்பற்றான பெருமாளை நோக்கித் தாராய்; அன்றிக்கே, பெருமாள் பக்கல் பண்டே அன்புடையவனாயன்றோ நீ இருப்பது? இப்போது ‘போ’ என்று நான் உனக்குச் சொல்லவேண்டியிருந்ததோ? ‘இல்லை என்றபடி’ என்னுதல். இப்படி இருக்கிற உன்னை நியமிக்க வேண்டுவது ஒன்று உண்டு; ‘அது யாது?’ எனின், ‘அஜாக்கிரதையாய் இராதேகொள்’ என்பது. ‘என் தான் அஜாக்கிரதை?’ என்னில், ‘உன் தமையனார் நடப்பர் அன்றோ? 1‘அவர் நடையிலே நடைகொள்வர்; அவர் நடை அழகிலே கண்வைத்துக் காவற்சோர்வு பட விடாதே கொள்வாய்,’ என்றாள் தேவி சுமித்திரை. ‘அப்படியே, இவ்வாத்துமாவையும் இங்கு வைத்தது திருமலைக்குப் போகைக்காக ஆயிற்று,’ என்றபடி.

    பைத்த பாம்பு அணையான் திருவேங்கடம் - தன்னுடைய பரிசத்தாலே விரித்த படங்களையுடைய திருவனந்தாழ்வானைப் படுக்கையாகவுடைய சர்வேசுவரன் அப்படுக்கையைக்காட்டிலும் விரும்பி வசிக்கின்ற தேசம். இனி, ‘பைத்த பாம்பு அணையாம் திருவேங்கடம்’ என்னுதல்; 2திருமலையாழ்வார்தம்மைத் திருவனந்தாழ்வானாகவும் சொல்லப்படும். மொய்த்த சோலை மொய் பூந்தடம் தாள் வரை - செறிந்த சோலையையும், பரப்பு மாறப் பூத்த தடாகங்களையும் உடைத்தான திருத்தாள்வரையை. எய்த்து இளைப்பதன் முன்னம் சென்று அடைமினோ. எய்த்தல் - நெஞ்சு இளைத்தல். இளைத்தல் - சரீரம் இளைத்தல்.                                      

(10)

____________________________________________________

1. ‘நடையிலே நடை கொள்வர்’ என்றது, ‘அவர் நடையழகாலே ‘காலாழும்
  நெஞ்சழியும்’ என்கிறபடியே உன்னை ஈடுபடுத்துவர்,’ என்றபடி.

  ‘மாக மடங்கலும் மால்விடை யும்பொன்
   நாகமும் நாகமும் நாண நடந்தான்.’

  என்றார், கம்பநாட்டாழ்வார்,

2. திருவேங்கடத்துக்குத் தமிழில் ‘அரவ வெற்பு’ என்றும், வடமொழியில்
  ‘சேஷகிரி’ என்றும் பெயர்கள் வழங்கப்படுவனவாம்.