பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
105

255

255

தாள்ப ரப்பிமண் தாவிய ஈசனை
நீள்பொ ழிற்குரு கூர்ச்சட கோபன்சொல்
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வுஎய்தி ஞாலம் புகழவே.

    பொ-ரை : திருவடியைப் பரப்பி உலகத்தை அளந்து கொண்ட சர்வேசுவரனை, நீளுகின்ற சோலைகளையுடைய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த ஒப்பில்லாத ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்று வல்லவர்கள் பூமியிலுள்ளவர்களெல்லாரும் புகழும்படி பேற்றினையடைந்து வாழ்வார்கள்.

    வி-கு : ‘பரப்பித் தாவிய ஈசன்’ என்க. கேழ் - ஒப்பு. ‘ஆயிரம் இராமர் நின்கேழ் ஆவரோ தெரியின் அம்மா!’ (கம். அயோத்.) என்ற இடத்துக் ‘கேழ்’ இப்பொருளதாதல் காண்க. ‘வல்லவர் ஞாலம் புகழ வாழ்வெய்தி வாழ்வர்,’ எனக் கூட்டுக. ஞாலம் - ஆகுபெயர்.

    ஈடு :  முடிவில், ‘இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள், ஆழ்வார் வேண்டிக்கொண்டபடியே திருவேங்கடமுடையான் திருவடிகளிலே எத்தகைய அடிமைகளும் செய்யப்பெறுவர்,’ என்கிறார்.

    தாள் பரப்பி மண் தாவிய ஈசனை - கடினமான இடத்திலே பூவைப் பரப்பினாற்போலே சுகுமாரமான திருவடிகளைக் கொண்டு காடும் மலையுமான பூமியை வருத்தமின்றி அளந்துகொண்ட சர்வேசுவரனை. நீள் பொழில் குருகூர்ச் சடகோபன் சொல் - திருவுலகு அளந்தருளின திருவடிகளுக்கு 1அணுக்கன் இட்டாற் போன்று நிழல் செய்யும்படி வளர்ந்த பொழிலையுடைய திருநகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச்செய்த. ‘ஆயின், திருவேங்கடமுடையானையன்றோ பாடிற்று இத்திருவாய்மொழியில்? மண்தாவிய ஈசனைப் பாடிற்று என்றல் யாங்ஙனம்?’ எனின், 2’கொண்டாய் குறளாய் நிலம் ஈரடியாலே, விண் தோய் சிகரத் திருவேங்கடம் மேய, அண்டா!’ என்றும், 3’மண் அளந்த இணைத்

___________________________________________________

1. அணுக்கன் - குடை.
2. பெரிய திருமொழி. 1. 10 : 4.
3. திருவாய். 6. 10 : 6.