பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
106

தாமரைகள்’ என்றும், 1‘உலகம் அளந்த பொன்னடியேயடைந்து உய்ந்து’ என்றும் 2ஆழ்வார்கள் அருளிச்செய்வர்கள்; அன்றியும், எல்லாரையும் கிரமத்திலே திருவடிகளின் கீழே இட்டுக் கொள்ளுகைக்காக நிற்கிற நிலையாலும், வரையாமல் கானமும் வானரமுமான இவற்றுக்கு முகங்கொடுத்துக்கொண்டு நிற்கிற படியாலும் திருவேங்கடமுடையானை ஸ்ரீவாமனனாகச் சொல்லப்படும்.

    கேழ் இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர் - ஒப்பில்லாத இப்பத்தையும் கற்க வல்லவர்கள். இப்பத்துக்கு ஒப்பு இல்லாமையாவது, ஆத்துமாவினுடைய சொரூபத்திற்குத் தக்கதான கைங்கரியத்தை விரும்பிய பத்து ஆகையாலே வந்த ஒப்பு இல்லாமை. ஞாலம் புகழவே வாழ்வு எய்தி வாழ்வர் - 3‘இளையபெருமாள் ஒருவரே! அவர் பெற்ற பேறு என்?’ என்று இங்ஙனே படைவீடாகக் கொண்டாடியது போன்று, எல்லாரும் புகழும்படியாகக் கைங்கரியத்தை விரும்பிவிடுதல் அன்றி இவருடைய விருப்பமே விருப்பமாகக் கைங்கரியமாகிற பேற்றினையடைந்து அனுபவிக்கப் பெறுவர்கள். இனி, ‘வாழ்வு எய்தி ஞாலம் புகழ வாழ்வர்,’ என்று கொண்டு கூட்டி, கொடியராயிருக்கும் பிரபுக்களை, அவர்கள் செய்யுங் கொடுமையும் நெஞ்சிலே கிடக்கவும், பிழைக்கவேண்டி ஏத்துவார்களே அன்றோ? அங்ஙனன்றி, இவனை ஏத்தப் பெற்றோமே! இற்றை விடிவும் ஒரு விடிவே!’ என்று பிரீதியோடே ஏத்தும்படியாக வாழ்வர் என்னுதல். ‘விசேடஞ்

___________________________________________________

1. பெரிய திருமொழி, 5. 8 : 9.

2. ‘நீணிலங் கடந்த நெடுமுடி அண்ணலை நோக்கி உலகம் தவம் செய்து
  வீடு பெற்ற மலையாதலாலும் வேங்கடத்தை எல்லையாகக் கூறினார்,’ (தொல்
  - எழுத். பாயிரம் உரை.) என்பர் நச்சினார்க்கினியரும்.

3. ‘கைங்கரியத்தைப் பெற்று, ஞாலம் புகழ வாழ்ந்த பேர் உளரோ?’ என்ன,
  அதற்கு விடையாக, ‘இளையபெருமாள் ஒருவரே!’ என்று தொடங்கி
  அருளிச்செய்கிறார். இவ்விடத்தில்,

  ‘திருவரை சுற்றிய சீரை ஆடையன்
  பொருவருந் துயரினன் தொடர்ந்து போகின்றான்
  இருவரைப் பயந்தவள் ஈன்ற கான்முளை
  ஒருவனோ! இவர்க்குஇவ்வூர் உறவென் றார்சிலர்.
  ‘என்பத்தைத் கேட்ட மைந்தன் இராமனுக் கிளையா ரென்று
  முன்பொத்த தோற்றத் தேமில் யானென்றும் முடிவி லாத
  துன்பத்துக் கேது வானேன்; அவனது துடைக்க நின்றான்;
  அன்பத்துக் கெல்லை உண்டே? அழகிதென் னடிமை’ என்றான்.’

  என்ற கம்ப ராமாயணச் செய்யுள்கள் ஒருபுடை ஒப்பு நோக்கலாகும்.