ஞர
ஞர்கள் ஏத்துதலேயன்றி,
அவர்களில் சிலர் நெஞ்சிலே துவேஷமுங்கிடக்க ஏத்துதலேயன்றி, இருந்ததே குடியாக எல்லாரும் பிரீதியோடே
புகழ்வார்கள்,’ என்பார், ‘ஞாலம் புகழ வாழ்வர்’ என்கிறார்.
முதற்பாட்டில், திருவேங்கடமுடையான்
திருவடிகளிலே எல்லாத்தேசத்திலும் எல்லாக்காலத்திலும் எல்லா நிலைகளிலும் எத்தகைய அடிமைகளும்
செய்யவேணும் என்று விரும்பினார்; இரண்டாம் பாட்டில், ‘அது ஒரு தேச விசேடத்திலே போனால் பெறுமதன்றோ?’
என்ன, ‘அங்குள்ளாரும் இங்கே வந்து அடிமை செய்கிற தேசமன்றோ? நமக்கு இங்கே பெறத் தட்டில்லை,’
என்றார்; மூன்றாம் பாட்டில், ‘நிறைவாளர்க்குத் தன்னைக் கொடுத்தவன் குறைவாளர்க்குத் தன்னைச்
தரச்சொல்ல வேண்டுமோ?’ என்றார்; நான்காம் பாட்டில், ‘அவர்களுக்குத் தன்னைக் கொடுத்தான்
என்றது ஓர் ஏற்றமோ, எனக்குங்கூடத் தன்னைத் தந்தவனுக்கு?’ என்றார்; ஐந்தாம் பாட்டில்,
‘எனக்குத் தன்னைத் தந்தான் என்றது ஓரேற்றமோ, என்னிலும் தண்ணியாரைத் தேடிக் கிடையாமல் நிற்கிறவனுக்கு?’
என்றார்; ஆறாம் பாட்டில், ‘இவ்வடிமையிலே இழிய, விரோதிகளும் தன்னடையே போம்’ என்றார்
ஏழாம் பாட்டில், ‘இக்கைங்கரியத்தைத் திருமலையாழ்வார் தாமே நமக்குத் தருவர்,’ என்றார்;
எட்டாம் பாட்டில், ‘அத்திருமலையாழ்வார் தாமே நம் விரோதிகளைப் போக்கித் தம்மையும்
தருவர்,’ என்றார்; ஒன்பதாம் பாட்டில், ‘திருமலையாழ்வார் எல்லாம் வேண்டுமோ நமக்குப் பேற்றினைத்
தருகைக்கு? அவருடைய சம்பந்தமுடையார் அமையும்,’ என்றார்; பத்தாம் பாட்டில், ‘சேஷிக்கு உத்தேஸ்யமாகையாலே
அடியர் ஆனார் எல்லாரும் திருமலையாழ்வாரை அடைமின்,’ என்றார்; முடிவில், பலம் சொல்லித்
தலைக்கட்டினார்.
திருவாய்மொழி நூற்றந்தாதி
ஒழிவிலாக் காலம்
உடனாகி மன்னி
வழுவிலா ஆட்செய்ய
மாலுக்கு - எழுசிகர
வேங்கடத்துப்
பாரித்த மிக்கநலம் சேர்மாறன்
பூங்கழலை நெஞ்சே! புகழ்.
(23)
ஆழ்வார் எம்பெருமானார்
சீயர் திருவடிகளே அரண்.
|