இன
இனிய இசை முதலானவைகள்
மோக்ஷம் முதலான புருஷார்த்தங்கள் இவ்வுலகிற்குப் பிரதானரான பிரமன் முதலானோர் இவற்றுக்கு
அடையக் காரணமான பிரகிருதி புருஷர்கள் ஆகிய இவை முழுதினையும் விபூதியாகவுடையனாய் இவற்றினுள்ளே
அந்தராத்துமாவாய் அநுப்பிரவேசித்து இவற்றோடே கலந்து நிற்கச் செய்தேயும் இவற்றினுடைய தோஷங்கள்
தீண்டப்படாதவனாய், 1’ஈசுவரன் தான் கர்மபலத்தைப் புசியாமல் மிக அதிகமாகப்
பிரகாசிக்கிறான்,’ என்கிற பிரமாண பலத்தாலே இவ்வாத்துமாவுக்கு வரக்கூடியதான இன்ப துன்பம் முதலானவைகள்
தன்பக்கல் தட்டாதபடி நிற்கையன்றிக்கே, எல்லாப்பொருள்களையும் ஏவுகின்ற தன்மையால் வந்த
புகரையுடையவனுமாய், விபூதியில் அவ்வப்பொருள்கட்கு வாசகமான சொற்கள் அசித்தையும் அசித்தாலே
அபிமானத்தையுடைய ஆத்துமாவையும் காட்டுகிற கணக்கிலே அவற்றுக்குள் அந்தர்யாமியாய் இருக்கிற
பரமாத்துமாவையும் காட்டி இக்கூட்டத்துக்குப் பெயர்களாய் அவன் பக்கலிலே முடிவு அடைந்திருக்கையாலே
அசாதாரணமான நாராயணன் முதலான சப்தங்களோடு வேற்றுமை அற எல்லாச் சொற்களும் அவனையே
சொல்லுகின்றனவாயிருக்கிறபடியையும், இவ்
____________________________________________________
பாசுரத்தில் ‘நுடங்கு
கேள்வி இசை என்கோ’ என்றதனைத் திருவுள்ளம்
பற்றிச் ‘செவிக்கினிய இசை முதலானவைகள்’ என்கிறார்.
ஏழாம் பாசுரத்தைத்
திருவுள்ளம் பற்றி, ‘மோக்ஷம் முதலான புருஷார்த்தங்கள்’ என்கிறார்.
எட்டாம்
பாசுரத்தைத் திருவுள்ளம் பற்றி, ‘இவ்வுலகிற்குப் பிரதானரான
பிரமன் முதலானோர்’ என்கிறார்.
‘யாவையும் எவரும் தானே’ என்றதனைத்
திருவுள்ளம் பற்றி, ‘இவற்றுக்கு அடையக் காரணமான பிரகிருதி
புருஷர்கள்’
என்கிறார். ‘யாவையும் எவரும் தானாய்’ என்றதனைத் திருவுள்ளம் பற்றி,
‘இவை முழுதினையும்
விபூதியாகவுடையனாய்’ என்கிறார். ‘தோய்விலன்’
என்றதனைத் திருவுள்ளம் பற்றி, ‘இவற்றினுடைய
தோஷங்கள்
தீண்டப்படாதவனாய்’ என்கிறார். ‘எல்லாப் பொருள்களையும் ஏவுகின்ற
தன்மையால்
வந்த புகழையுடையவனுமாய்’ என்றது, ‘தோய்விலன்’ என்றதன்
பொருள் ஆற்றலால் போந்த பொருள்.
‘கண்ணனை, சங்கு சக்கரத்தன்’
முதலான அசாதாரணமான பெயர்களோடு விபூதியில் அவ்வப்பொருள்கட்குச்
சாமாநாதி கரண்யம் சொல்லுகைக்கு ஏதுவை அருளிச்செய்கிறார், ‘விபூதியில்
அவ்வப் பொருள்கட்கு’
என்று தொடங்கி. வாசகமான சொற்கள் - தேவர்கள்,
மனிதர்கள் முதலான சொற்கள்.
1. இருக்கு வேதம்.
|