பெ
பொருளாகும்படியன்றோ
மயர்வற மதிநலம் அருளிற்று? கர்மம் காரணமான நினைவு பின் நாடாதபடியன்றோ இவர்க்கு ஈசுவரன்
வெளிச்சிறப்புப் பண்ணிக்கொடுத்தது?
‘நன்று; இவ்விபூதிதன்னிலே
1‘எண்ணாத மானிடத்தை எண்ணாதபோது எல்லாம் இனியவாறே,’ என்று சிலரைச்சொல்லி,
2‘பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே,’ என்று ஒரு சிலரை மறக்கவொண்ணாதபடியாகவும்
சொல்லா நின்றதே?’ எனின், 3ஞானம் பிறந்த நிலையிலே இருக்கும்படியாயிற்று இது;
பிராப்தி சமயத்தில் வந்தால், இவ்வேறுபாடின்றி எல்லாம் ஒக்க அனுபவிக்கப்படும் பொருளாகவே
இருக்கும். எல்லாம் ஈசுவர விபூதியாக இருக்கச்செய்தேயன்றோ சிலரைப் 4‘பொல்லாத
தேவரைத் தேவரல்லாரைத் திருவில்லாத் தேவரைத் தேறேன்மின் தேவு’ என்கிறது? இங்ஙனம், அவ்வந்நிலைகள்
காரணமாக விஷயங்களைப் பாகுபாடு செய்யாதொழியின், சாஸ்திரங்கள் எங்கும் ஒக்கச் சேரக் கிடக்கும்படி
பார்க்கும் போது நின்ற நின்ற நிலைகளிலே 5ஹேய உபாதேய விபாகம் பண்ணி அநுசந்திக்க
வேண்டி வருமேயன்றோ?
இவர்க்கு, இறைவன்
தன் ஸ்வரூப குண விபூதி முதலானவைகளை அடையக் காட்டிக்கொடுக்கக் கண்டு, 6விபூதி காரணமான
பூதங்கள் பௌதிகங்கள் அவற்றில் பிரகாசிக்கின்ற மாணிக்கம் முதலானவைகள் சுவைப்பொருள்கள்
செவிக்கு
________________________________________________
1. பெரிய திருமொழி,
11. 6 : 7.
2. பெரிய திருமொழி,
7. 4 : 4.
3. ஞானம் பிறந்த நிலை
- முமுக்ஷீ நிலை. பிராப்திசமயம் - முத்தநிலை
4.
நான்முகன்
திருவந், 53.
5. ஹேய உபாதேய விபாகம்
- தள்ளத்தக்கன இவை, கொள்ளத் தக்கன இவை
என்னும் வேறுபாடு.
6. இத்திருவாய்மொழியில்,
முதற்பாசுரத்தை நோக்கி, ‘விபூதி காரணமான
பூதங்கள்’ என்கிறார். இரண்டாம் பாசுரத்தைத் திருவுள்ளம்
பற்றிப்
‘பௌதிகங்கள்’ என்கிறார். நாலாம் பாசுரத்தில் முதலிரண்டு அடிகளைத்
திருவுள்ளம் பற்றி,
‘அவற்றில் பிரகாசிக்கின்ற மாணிக்கம் முதலானவைகள்’
என்கிறார். ஐந்தாம் பாசுரத்தில்
‘நலங்கடல் அமுதம்’ என்பது
முதலானவைகளைத் திருவுள்ளம் பற்றிச் ‘சுவைப்பொருள்கள்’ என்கிறார்.
ஆறாம்.
|