பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
109

நெஞ

    நெஞ்சு அழியும் கண்சுழலும்’ என்னும் தன்மையரே 1இவரும். அவன் சொரூபத்தோடு குணத்தோடு விபூதியோடு செயல்களோடு வேறுபாடு இல்லாமலே எல்லாம் உத்தேஸ்யமாய் இருக்கின்றது இவர்க்கு; ‘இறைவனுடைய குணங்களுக்கும் விபூதிக்கும் இவர்க்கு வேற்றுமை இல்லை,’ என்பது கருத்து. 2அவை தம்மைக் கண்ட கண்ட இடங்களில் அனுபவிக்கையன்றிக்கே, மாணிக்கத்தையும் வயிரத்தையும் முத்தையும் ஓர் ஆரத்திலே சேர்த்து அனுபவிப்பாரைப் போலே அவற்றை அடைய அவன் பக்கலிலே சேர்த்து அனுபவிக்கிறார். அன்றியே, ‘குணங்களுக்குப் பிரித்து நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லையாமாறு போன்று, விபூதிக்கும் அவனை ஒழிய நிலையுதலாதல் தோன்றுதலாதல் இல்லாமையாலே, சேர்த்து அனுபவிக்கிறார்,’ என்னுதல்; அன்றியே, ‘முத்தனுக்கு லீலா விபூதியும் ததீயத்வ ஆகாரத்தாலே அனுபவிக்கப்படும் பொருள் ஆகாநின்றதேயன்றோ? அத்தன்மையாலே அனுபவிக்கிறார்,’ என்னுதல். ‘ஆயின், முத்தன் 3‘இச்சரீரத்தை நினையாமலே நான்கு பக்கங்களிலும் சஞ்சரிக்கின்றான்,’ என்று கூறப்பட்டுள்ளதே?’ எனின், அவ்விடத்தில் கர்மம் காரணமான உருவத்தை நினையான் என்கிற இத்தனையேயாம். ஆக, கர்மங்காரணமான உருவம் நினைவிற்கு விஷயம் ஆகாதபடியான பாகம் பிறந்தால், எல்லாம் அவனுடைய பொருள் என்றே தோன்றி, எல்லாம் ஒக்க அனுபவிக்கப்படும் பொருளாகவே இருக்கும். இவர்க்கு அவன் குணங்களோடு விபூதியோடு வேற்றுமை அற அனுபவிக்கப்படும்

_____________________________________________________

1. இதனால், ‘இவர் பத்தி பாரவஸ்யத்தாலே எல்லா
  அடிமைகளும் செய்யமாட்டாமையானும், அவனும் வாசிகமான
  அடிமையினையே எல்லா அடிமையுமாகக் கொள்ளும் தன்மையனாதலானும்,
  பாரித்தபடியே இவரும் அடிமை செய்து தலைக்கட்ட மாட்டார்; அவனும்
  அடிமை கொள்ளமாட்டான்,’ என்றபடி.

2. ‘இவர்க்கு அவன் குணங்களோடு விபூதியோடு வாசி இன்றியே இருத்தற்குக்
  காரணம் யாது?’ என்னும் வினாவைத் திருவுள்ளத்தே கொண்டு அதற்கு
  விடை அருளிச்செய்கிறார், ‘அவைதம்மை’ என்றது முதல் ‘ஆகா
  நின்றதேயன்றோ? அத்தன்மையாலே அனுபவிக்கிறார் என்னுதல்,’ என்றது
  முடிய. ததீயத்வம் - இறைவனுக்கு உரிமைப்பட்டிருக்கும் தன்மை. இதனையே,
  மேலும் விரித்து விளக்குகிறார், ‘ஈசுவரன் வெளிச் சிறப்புப் பண்ணிக்
  கொடுத்தது’ என்றது முடிய. வெளிச்சிறப்பு - ஞானம்.

3. சாந்தோக், 8. 12 : 3.