|
New Page 1
கும் கூடாதோ?’ என்னில்,
கூடாது; அதற்கு அடி - உட்புகுதற்கு உளதாய காரண விசேடம். என்றது, ஆத்துமா கர்மமடியாகப் பிரவேசிக்கின்றது;
இறைவன் இவற்றுக்குள் திருவருள் காரணமாகப் பிரவேசிக்கின்றான். சிறைக்கூடத்திலே சிறையனும்
கிடந்தான்; அரசகுமாரனும் இருந்தான்; சிறையன் கர்மமடியாகப் பிரவேசிக்கையாலே துக்கத்திற்கு
ஏதுவாயிற்று; அரசகுமாரன் இச்சையாலே பிரவேசிக்கையாலே போகரூபமாயிருந்தது. 1‘ஆத்துமாவும்
இறைவனும் ஒரு சரீரத்தைப் பற்றித் தங்கியிருக்கின்றார்கள்; அவர்களுள் ஆத்துமாவானது கர்ம
பலத்தை அனுபவிக்கின்றது; இறைவன் கர்ம பலத்தை அனுபவியாமல் மிக அதிகமாகப் பிரகாசிக்கிறான்,’
என்பது மறை மொழி.
புலன் ஐந்துக்கும்
சொல்லப்படான் - ஐம்புலன்களுக்கும் விஷயமாகச் சொல்லப்படான். அன்றிக்கே, ‘நினைத்தேயன்றோ
சொல்லுவது? அங்ஙனம் சொல்லுதற்கு முன்பில் நினைவினை ஆகுபெயரால் கூறியதாகக் கொண்டு அந்நினைவினால்
நினைக்கப்படான்,’ என்னுதல். ‘பின்னை, அவன்தான் இருக்கும்படி என்?’ என்னில், உணர்வின் மூர்த்தி
- ஞானத்தையே வடிவாகவுடையவனாயிருப்பான்.
‘எல்லாம் செய்தாலும்
இவற்றோடு உண்டான சேர்க்கை மெய்யாயிருக்க, இவற்றினுடைய தோஷம் தன்பக்கல் தட்டாதபடியிருப்பான்
என்னும் இது கூடுமோ?’ என்னில், ஆவி சேர் உயிரின் உள்ளால் ஆதும் ஓர் பற்றிலாத பாவனை
அதனைக்கூடில் அவனையும் கூடலாம் - உடலில் சேர்ந்திருக்கின்ற உயிரினிடத்து அந்தச் சரீரத்திற்கு
உண்டான பால்யம் யௌவனம் முதலியவைகள் ஒன்றினாலும் ஒரு சம்பந்தமும் இல்லையாம்படியாகச்
சொல்லுகிற சொல்லானது அந்த ஆத்துமாவிற்குக் கூடாநின்ற பின்பு, அப்பொருள் அவனையுங்கூடத் தட்டு
இல்லை.
அன்றிக்கே,
பின்னிரண்டு அடிகட்கு, 2‘அவன் பக்கல் பத்தி உண்டாகில் அவனைக் கிட்டலாம்’ என்றும்,
‘புறம்பே உள்ள
_____________________________________________________
1.
இருக்கு வேதம்.
2. பின் இரண்டு அடிகட்கு வேறு வகையாகக் கூறப்படும் மூன்று விதமான
பொருள்களை அருளிச்செய்கிறார். ‘அவன் பக்கல் பத்தியுண்டாகில் அவனைக்
கிட்டலாம்’ என்றது,
முதல் யோஜனை; பத்தி பரமாக அருளிச்செய்தது;
‘ஆத்துமாவோடு சேர்ந்திருக்கிற பரமாத்துமாவின்
பக்கலிலே பத்தியானது
உண்டானால், அந்தப் பரமாத்துமாவையும் கூடலாம்,’ என்பது
|