| வட 
வட்டங்களையெல்லாம் 
வாரிக்கொண்டு ஒரு குருந்தின்மேலே ஏறி நிற்க, தங்களால் ஆன அளவெல்லாம் வருந்திப் பார்த்த 
இடத்திலும் அவன் பின்னையும் கொடாதே ஒழிய, அவர்களிலே ஈசுவரனுடைய திருவுள்ளத்தை அறிவாள் 
ஒருத்தி சொல்லுகிற வார்த்தை இது: ‘கயலோடே கூட வாளையானது காலைக் கதுவாநின்றது’ என்கிறாள். 
என்றது, ‘தன்னைப் புகல் புக்கதொரு யானையை ஒரு நீர்ப்புழு நலிய, அது பொறுக்கமாட்டாமல் விரைந்து 
வந்து விழக்கூடிய அவன், அந்தரங்கர்களான நாம் நோவுபடாநின்றால் வாராதிரான்’ என்னுமதனாலே 
சொல்லுகிறாள். ‘யானையை ஒரு நீர்ப்புழுவாயிற்று அங்கு நலிந்தது; 1அபலைகளான எங்களை 
இரண்டு நீர்ப்புழுக்கள் அலவோ நலிகின்றன?’ என்கிறாள்; ‘இதனைக் கேட்டபோதே பரிவட்டங்களையும் 
கொண்டு அரை குலையத் தரை குலைய விழும் என்றிருக்கிறாள்’ என்றபடி. ‘ஆயின், ஆய்ச்சியர்கட்கு 
ஈசுவர மர்மம் தெரியுமோ?’ எனின், 2வைஷ்ணவ சந்தானத்திலே பிறந்தார்க்கு ஈசுவர 
மர்மங்கள் தெரியுமன்றோ? ‘இன்னதற்கு வருவர், இரங்குவர்’ என்று அறிகின்றவர்கள் அவர்களேயாவர். 
    கார் முகில் 
போல் வண்ணன் கண்ணன் - யானையின் இடரைப் போக்கின போது வடிவிற்பிறந்த துடிப்பும் குணத்திற் 
பிறந்த துடிப்பும் இருக்கிறபடி. வடிவழகையனுபவிப்பித்து யானைக்குக் கையாளாய் நின்ற நிலை; தன்னை 
அனுபவிப்பித்துத் தாழ நின்றாயிற்றுப் போக்கிற்று. ‘ஆயின், ‘கண்ணன்’ என்றால், ‘கையாள்’ 
என்று காட்டுமோ?’ எனின், ‘கிருஷ்ணன் என்றால், தன்னை அனுபவிப்பார்க்குக் கையாளாயிருக் 
_______________________________________________  
1. அபலைகள் - பலமற்றவர்கள்; 
பெண்கள். 
2. ‘வைஷ்ணவ சந்தானத்திலே 
பிறந்தார்க்கு’ என்றது, ‘பெரியாழ்வார்திருமகளார் ஆகையாலே’ என்றபடி.
 
3. வடிவழகையும் குணத்தையும் 
சொல்லுவதற்கு ஒரு ரசோக்தி ‘யானையின்இடரைப் போக்கின போது' என்று தொடங்கும் வாக்கியம். 
துடிப்பு -
 அதிசயம். ‘கார்முகில்போல் வண்ணன்’ என்றதனை நோக்கி, ‘வடிவழகை
 அனுபவிப்பித்து’ 
என்கிறார். ‘கண்ணன்’ என்றதனை நோக்கிக் ‘கையாள்’
 என்கிறார்.
 |