| ந 
    நீட்டாக ஒண்ணாது 
என்று 1‘தூவாய புள் ஊர்ந்து வந்து’ பூ இடுவித்துக்கொண்டான் என்றபடி. அன்றி, 
‘முதலையின் வாயிலே அகப்பட்ட யானையின் காலைத் திருக்கையாலே பரிசித்துக்கொண்டு குளிரக் கடாக்ஷித்து 
நின்ற நிலை’ என்னுதல்; யானையின் காலில் 2விலங்கை அன்றோ வெட்டிவிட்டது? 
‘கொடிய வாய் விலங்கே’ அன்றோ? ஆக முதலையின் வாயிலே அகப்பட்ட யானையின் காலைத் திருக்கையாலே 
தொட்டு, 3திருமால் சக்கரத்தால் முதலையைப் பிளந்தார்’ என்கிறபடியே, அதனுடைய
4கிராஹத்தைப் போக்கி நின்ற நிலையைத் தெரிவித்தபடி. 
    5‘‘காலைக் 
கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி’ என்பது, என் சொல்லியவாறோ?’ எனின், ஸ்ரீ கோபிமார் கரையிலே 
திருப்பரிவட்டங்களை இட்டுவைத்துப் பொய்கையில் இழிந்தவாறே, பரி 
_________________________________________________  
1.
பெரிய திருமொழி, 6. 
8 : 3. 
      ‘அருள்செய்த’ என்பதற்கு 
இரண்டு வகையில் பொருள் அருளிச்செய்கின்றார்:முதற்பொருள், ‘பூவின் செவ்வி மாறாதபடி திருவடிகளிலே
 இடுவித்துக்கொண்டு யானையின் துயரைப் போக்கிய’ என்பது. இங்குச் ‘சிறை’
 என்பதற்குப் ‘பறித்த 
மலரைத் திருவடிகளிலே சார்த்தப்பெறாமையால்
 உண்டான துக்கம்’ என்பது பொருள். இரண்டாவது 
பொருள், ‘விலங்கை
 வெட்டி அருள் செய்தான்’ என்பது. இங்குச் ‘சிறை’ என்பதற்கு ‘விலங்கு’
 என்பது 
பொருள். இப்பொருளில் ‘அருள்செய்த’ என்றதனொடு பின்
 வருகின்ற ‘கண்ணன்’ என்ற சொல்லையும் 
கூட்டிப் பொருள் காண்க.
 கண்ணன் - கண்ணையுடையவன்; இதனையே ‘குளிரக் கடாக்ஷித்து நின்ற
 நிலை’ 
என்கிறார் வியாக்கியானத்தில்.
 
2. ‘விலங்கு’ என்றது, 
சிலேடை: கால் விலங்கு, முதலை, ‘முதலையை ‘விலங்கு’என்றல் கூடுமோ?’ எனின், அதற்குப் பிரமாணம் 
காட்டுகிறார், கொடிய வாய்
 விலங்கு’ என்று. இது, 
பெரிய திருமொழி, 5. 8 
: 3.
 
3.
விஷ்ணு தர்மம். 
4. ‘கிராஹம்’ என்றது, 
சிலேடை: துக்கம்; முதலை. 
5. ‘இறைவனுடைய செயல்கள் 
பல இருக்க, யானைக்கு அருள் செய்தஇச்செயலை எடுத்து முதல் முன்னம் கூறும் கருத்து யாது?’ என்னும்
 வினாவை எழுப்பிக்கொண்டு, அதற்கு விடையாக, அது ஈசுவரனை
 வசீகரிப்பதற்குச் சிறந்த சாதனமாம்’ 
என்று கூறத் திருவுள்ளம் பற்றி அதற்குச்
 சம்வாதம் காட்டுகிறார், ‘காலைக் கதுவிடுகின்ற’ என்ற 
திருப்பாசுரம்,
 நாய்ச்சியார் திருமொழி, 3 : 5.
 |