பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
150

என

என்கிறபடியே, இரண்டினுடையவும் செயல்களாய்ப் போந்தது, பின்பு அது தவிர்ந்து, முதலையின் செயலேயாய் யானையின் செயல் ஒழிந்ததாதலின், ‘நின்ற’ என்கிறார். யானைக்குத் தன் நிலம் அல்லாமையாலே வலிமை குறைய நேர்ந்தது; முதலைக்குத் தன் நிலம் ஆகையாலும், ‘விரும்பியது பெற்றோம்’ என்ற எண்ணத்தாலும் வலிமை இரட்டித்திருக்குமன்றோ? 1‘முழுவலி முதலை’ என்றாரே அன்றோ திருமங்கை மன்னனும்? 2‘தன் விருப்பம் முற்றுப் பெறுதற்கு ஒரு கறையடி காண வல்லோமே!’ என்று மனக் கிலேசத்தோடே கிடக்கையாலே வலிமை குறைந்திருந்தது; இப்போது அது பெறுகையாலே முழுவலியாயிருந்தது என்றபடி. தன் விருப்பம் முற்றுப்பெறுதற்கு இதுதான் 3கால்வாசி அறிந்தே அன்றோ பற்றிற்று? முன்பு ஒன்றைப் பிடித்தது இல்லையே? நெடுங்காலமெல்லாம் நம் சாபம் நீங்குதற்கு ஒரு 4கறையடி காண வல்லோமே!’ என்று கிடக்கிறது, அது பெற்றால் விடாதேஅன்றோ? கறையடி - யானை.

    கைம்மாவுக்கு - யாதேனும் ஒன்று வந்தாலும் நம்மைக் கைம்மிஞ்சி வாராது,’ என்று கையைக் கண்டிருந்த யானைக்கு வந்து நோவு ஆதலின், ‘கைம்மா’ என்றது. அன்றியே, ‘துதிக்கையும் முழுகிப் போய்விட்ட துன்பம் ஆதலின், ‘கைம்மா’ என்கிறது ‘என்னுதல். ‘இடர்ப்படும்போதும் தன் பெருமைக்குத் தக்க படியாகவே பட்டது’ என்றபடி. 5‘ஆனையின் துயரம்’ என்னக்கடவதன்றோ? அருள் செய்த - துதிக்கை மூழ்கியும் பூவுக்கு ஒரு வாட்டம் வாராதபடி எடுத்துப் பிடித்துக்கொண்டு நின்றதாயிற்று, அதிற்செவ்வி மாறாதபடி திருவடிகளிலே இடுவித்துக்கொண்டு நின்ற நிலை. என்றது, ‘யானைக்கு நெடுங்கை

____________________________________________________ 

1. பெரிய திருமொழி, 5. 8 : 3.

2. ‘தன் விருப்பம்’ என்றது முதல் ‘இருந்தது என்றபடி’ என்றது முடியவுள்ள
  தொடர், ‘முழுவலி முதலை’ என்ற மேற்கோட்பாசுரத்தின் பொருள்.

3. ‘கால் வாசி’ என்றது, சிலேடை: காற்பங்கு, கால் என்ற உறுப்பினுடைய வாசி.

4. ‘கறையடி’ என்றது, சிலேடை: ‘கறுத்த அடி’ என்பதும் ‘உரல் போன்ற
  பாதத்தை உடையது’ என்பதும் பொருள்.

5. பெரிய திருமொழி, 2. 3 : 9.