|
கழல
கழல்களிலே பணி மாறப்
பூத்தேடிக் கிடையாமையாலே 1இடர்ப்பட்டு வருகின்றவன், தூரத்திலே குளிர்ந்த சோலையும்
பூத்த பொய்கையுமாய்த் தோற்றக்கண்டு ‘உள்ளே கொடிய முதலை கிடந்தது’ என்று அறியாமல் மேல்
விழுந்து வந்து பறித்தான் ஆயிற்று. ‘உத்தேஸ்யனான ஈசுவரனை விட்டு, பொழிலையும் பொய்கையையும்
இப்போது வர்ணிப்பது என்?’ எனின், 2அப்போது அவனுக்கு உத்தேஸ்யம் ஆயினமை
போன்று, அச்சோலையோடு பொய்கையோடு வேற்றுமை அற இவர்க்கு உத்தேஸ்யமாயிருத்தலின் வர்ணிக்கிறார்.
அன்றியே, 3‘தயரதன் பெற்ற மரகத மணித்தடத்துக்கு இப்பொய்கையும் போலியாய்
இருத்தலின், வர்ணிக்கிறார்,’ என்னுதல். அன்றியே, 4‘தாமரைக்காடு மலர்க்கண்ணொடு
கனிவாய் உடையதுமாய்’ என்கிறபடியே, உபமான முகத்தாலும் விரும்பத்தக்கதாய் இருக்கிறதாதலின்,
வர்ணிக்கிறார் என்னுதல்.
பொய்கை முதலைச்
சிறைப்பட்டு நின்ற - 5தன் நிலம் அல்லாமையாலே வேறுபட்ட சாதியது ஒன்றன் கையிலே
அகப்பட்டது; வெளி நிலமாகில் யானையே வெல்லுமன்றோ? யானைக்கு யானை யன்று; யானைக்குச்சிங்கம்
அன்று; அற்பமாய் இருப்பதொரு நீர்ப்புழுவின் கையிலே அகப்பட்டது என்பார், ‘முதலைச் சிறைப்பட்டு’
என்கிறார். 6‘தெய்வ ஆண்டில் அநேகம் ஆயிரம் ஆண்டு முதலை நீருக்கு இழுக்க,
யானை கரைக்கு இழுக்க’
____________________________________________________
1. இந்த யானை தெய்வப்பிறவியையுடையதாதலின்,
‘இடர்ப்பட்டு வருகின்றவன்’
என உயர்திணையாக அருளிச்செய்கிறார்.
‘அவன் மடிமேல்
வலந்தது பாம்பு’ என்பது
பரிபாடல் (4. 42.)
‘இன்னும் அது கடவுட்கொடி
என்பது தோன்ற’ அவன்’ என உயர்
திணையாற்கூறினார்’ என்றார்
பரிமேலழகர்.
2. பொய்கையையும்
பொழிலையும் வர்ணிப்பதற்குரிய காரணத்தை மூன்று
வகையாக அருளிச்செய்கிறார், ‘அப்போது’ என்று
தொடங்கி. ‘ஸ்ரீ
கஜேந்திராழ்வானுக்கு உத்தேஸ்யமான வழியாலே தமக்கும் உத்தேஸ்யமாய்
வர்ணிக்கிறார்,’
என்பது முதல் வகையின் கருத்து.
3.
திருவாய். 10. 1 : 8.
4.
திருவாசிரியம், 5.
5. ‘நெடும்புனலுள் வெல்லும்
முதலை; அடும்புனலின்
நீங்கின்
அதனைப் பிற.’
(குறள். 495)
என்ற திருக்குறளின்
கருத்து ஒப்புமையை இங்குக் காண்க.
6.
விஷ்ணு தர்மம்.
|