பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
148

267

267

பொய்ம்மாம் பூம்பொழிற் பொய்கை
    முதலைச் சிறைப்பட்டு நின்ற
கைம்மா வுக்குஅருள் செய்த
    கார்முகில் போல்வண்ணன் கண்ணன்
எம்மா னைச்சொல்லிப் பாடி
    எழுந்தும் பறந்தும்துள் ளாதார்
தம்மால் கருமம்என்? சொல்லீர்,
    தண்கடல் வட்டத்துஉள் ளீரே!

    பொ-ரை : ‘வண்டுகள் மொய்க்கின்ற பூக்களையுடைய சோலையாற்சூழப்பட்ட பொய்கையிலுள்ள முதலையால் பிடிக்கப்பட்டு நின்ற கைம்மாவுக்குத் திருவருள் புரிந்த, கார்காலத்து எழுந்த மேகம் போன்ற நிறத்தையுடையவன் கண்ணன் எம்மான் ஆன எம்பெருமானைச் சொல்லிப் பாடி எழுந்தும் பறந்தும் துள்ளாதவரால் காரியம் யாது? குளிர்ந்த கடலாற்சூழப்பட்ட பூமியில் உள்ளவர்களே! நீங்களே சொல்லுங்கள்,’ என்கிறார்.

    வி-கு : ‘தண்கடல் வட்டத்துள்ளீர், சொல்லீர்’ என மாறுக.

    இத்திருவாய்மொழி அறுசீர்க்கழிநெடிலடி ஆசிரியவிருத்தம்.

    ஈடு : முதற்பாட்டில், ‘அடியவன் இடர்ப்பட்ட மடுவின் கரையிலே, கலங்காப்பெருநகரினின்றும் அரை குலையத் தலை குலைய வந்து விழுந்த நீர்மையை அநுசந்தித்தால் மனமும் உடலும் வேறுபடாதவர்கள் 1மக்கள் ஆகார்,’ என்கிறார்.

    2மொய்ம் மாம் பூம் பொழில் - மொய்க்கப்பட்ட வண்டுகள் பொருந்திய பூக்களையுடைய பொழில். அன்றி, ‘செறிந்துள்ள மாமரங்களையுடைய அழகிய பொழில்’ என்னுதல். அன்றியே, ‘விரும்பத்தக்கதாய்ப் பரந்துள்ள மலர்ந்த பொழில்’ என்னுதல். பொழில் - சோலை. மொய் மாம் பூம் பொழில் பொய்கை - 3பூவார்

____________________________________________________ 

1. ‘தம்மால் கருமம் என் சொல்லீர்’ என் கையாலே, ‘மக்கள் ஆகார் என்கிறார்.

2. ‘மொய்ம் மாம் பூம் பொழில்’ என்பதற்கு மூன்று வகையாகப் பொருள்
  அருளிச்செய்கிறார்.

3. ‘யானை சிறைப்படுகைக்கு அடி யாது? என்ன, அதற்கு விடையாகப் ‘பூவார்
  கழல்களிலே’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.