|
1இப
1இப்படிப்பட்ட
பகவானுடைய அனுபவத்தால் வந்த பிரீதியின் மிகுதியினாலே முதலிலே இதில் அறிவில்லாதாரையும்,
அறிவுண்டாய்ப் புறம்பே கருத்தூன்றினவர்களாயிருப்பாரையும், சந்தி செய்தல் முதலிய ஒழுக்கங்களையே
முக்கியமாகக் கொண்டவர்களாய், ‘அநுஷ்டான காலங்களில் திருநாள் சேவிக்கலாகாது,’ என்று
இருப்பாரையும், அறிவு உண்டாகியே புறம்பே பரபரக்கற்று ‘அதற்கும் இதற்கும் வாசி என்?’ என்று
சமானபுத்தி பண்ணி இருப்பாரையும், தங்களை ஆஸ்திகராகப் புத்தி பண்ணி அவ்வாஸ்திக்யத்துக்குப்
‘புறம்பே விநியோகம்’ என்று இருப்பாரையும், இராஜச தாமசங்கட்கு ஒத்தனவான அற்பப் பலன்களைக்கொண்டு
போவாரையும், அந்த அந்தப் பலன்களுக்காகத் தாமத தேவதைகளை அடைகின்றவர்களையும் எடுத்து, அவர்களுக்குப்
புறம்பே எல்லா நன்மைகளும் உளவேயானாலும், பகவானுடைய குணங்களை அநுசந்தித்தால் அவிக்ருதராகில்,
‘அவர்கள் அவஸ்துக்கள்’ என்று அவர்களை நிந்தித்து, ‘உயர்குடிப்பிறப்பு, உயர்ந்த தொழில்,
ஞானம் இவைகள் இல்லாதிருப்பினும், பகவானை அனுபவம் பண்ணி விக்ருதராமது உண்டாகில், அவர்களுக்கு
நான் அடிமை’ என்று அவர்களைக் கொண்டாடிப் பிரீதராகிறார்.
_____________________________________________________
1. இத்திருவாய்மொழியில்
சொல்லப்பட்ட பொருளை ஏழு வகையாகப் பிரித்து
அருளிச்செய்கிறார். ‘இப்படிப்பட்ட’ என்று தொடங்கி.
‘சந்தி செய்தல் முதலிய
ஒழுக்கங்களையே’ என்றது, ‘தாங்கள் செய்யும் கர்மாநுஷ்டானங்களை
முக்கியமாகக் கொண்டாடினவர்களாய் என்றபடி. இங்கு, திருவரங்கநாதனுக்குத்
திருவாலவட்டக் கைங்கரியம்
செய்துகொண்டிருந்த பட்டரைப் பார்த்துச்
‘சந்தியாவந்தன காலம் ஆயிற்றே?’ என்ற அடியார்களுக்குப்
பட்டர்
அருளிச்செய்த வார்த்தையை நினைப்பது. ‘கர்மம் கைங்கரியத்திலே புகும்’
என்பது
ஸ்ரீவசனபூஷணம்.
பரபரக்கற்று - மேலெழக்கற்று.
அவிக்ருதர் -
அநுசந்தானத்தால் தம்வசமிழந்து பரவசப்பட்டுச் சரீரத்தில்
வேறுபாட்டினையடையாதவர். அவஸ்துக்கள்
- பொருள் அல்லாதார்; ‘ஒரு
பொருளாக மதிக்கப்படாதவர்’ என்றபடி. விக்ருதர் - அநுசந்தானத்தால்
தம்
வசம் அழிந்து சரீர வேறுபாட்டினை அடையுமவர்கள்.
|