|
க
கின்ற திருமகள் கேள்வனை,
பண்கள் தம்மில் கலக்கும்படியாகப் பாடிப் பூமியில் கால் பாவாமல் நடனத்தைச் செய்துகொண்டு திரியாதவர்கள்
மண்கொண்ட இவ்வுலகத்தில் வல்வினை மலைந்து மோதும்படி பிறப்பார்கள்,’ என்றவாறு.
வி-கு :
‘தடிந்து இரையாக
உண்ணும் அசுரர், வல்வினை மலைந்து மோதப் பிறப்பார்,’ என மாறுக. தலைக்கொள்ளுதல் - ஒன்றோடு
ஒன்று கலத்தல். மோத - அடிக்க. மலைதல் - ஈண்டு, வருத்துதல். மண்கொள் உலகு - அணுக்களைக் கொண்ட
உலகு, ‘மண் திணிந்த நிலனும்’ என்ற இடத்து ‘அணுக்கள் செறிந்த நிலனும்’ என்று உரை கூறினர்
புறநானூற்று உரையாசிரியர். இனி, பொன்னுலகை விலக்குவதற்கு ‘மண் கொள் உலகு’ என்கிறார்
எனலுமாம்; இனச்சுட்டுள்ள அடை.
ஈடு :
இரண்டாம் பாட்டு. 1‘ஸ்ரீ கஜேந்திராழ்வானுக்கு உதவின உதவி, நித்தியசூரிகட்கு உதவிய
உதவி என்னலாம்படியன்றோ, தங்களுக்கு இடர் உண்டு என்று அறியாத சமுசாரிகளுடைய விரோதியைப்
போக்கி உதவி செய்வது? அங்ஙனம் உதவி செய்யும் அந்நீர்மையை அநுசந்தித்தால், விகாரமில்லாத
வராயிருப்பவர்கள் மஹா பாவம் அனுபவிக்கப் பிறக்கிறவர்கள்,’ என்கிறார்.
தண்கடல் வட்டத்துள்ளாரைத்
தமக்கு இரையாகத் தடிந்து உண்ணும் திண்கழல் கால் அசுரர் - அசுரர்கள் பிராணிகளைக் கொன்று உண்டு,
அதனாலே ஜீவிப்பார்களாயிற்று. ‘இவர்களைக் கொல்லுதற்கு இவர்கள் செய்த அபகாரம் என்?’ என்னில்,
தண் கடல் வட்டத்துள்ளார் - ஒரே தேசத்தில் வசிக்கும் காரணத்தால் வந்த சம்பந்தமே காரணமாக
ஆயிற்று நலிவது. சர்வேசுவரன் ரக்ஷிக்கைக்கு ஏது யாது ஒன்று? அதுவே ஆயிற்று இவர்கள் நலிவதற்குக்
காரணமும். 2‘தேவரீருடைய தேசத்திலே வசிக்கின்ற நாங்கள் உம்மாலே ரக்ஷிக்கத் தகுந்தவர்கள்,’
என்பது
_____________________________________________________
1. இராக்கதர்களை
அழித்து, உலகத்தாரைப் பாதுகாக்கும் குணமானது,
முதற்பாசுரத்தில் அருளிச்செய்த குணத்தைக்காட்டிலும்
மஹா குணமாகும்
என்று அருளிச்செய்யத் திருவுள்ளம் பற்றிக் ‘குனித்துழலாதார் வினை மோத
மலைந்து
பிறப்பர்,’ என்பதனைக் கடாக்ஷித்து அவதாரிகை
அருளிச்செய்கிறார்.
2. சர்வேசுவரன்
ரக்ஷிக்கைக்குப் பிரமாணம், ‘தேவரீருடைய தேசத்திலே’ என்று
தொடங்கும் பொருளையுடைய சுலோகம்.
இது,
ஸ்ரீராமா. ஆரண்ய. 1 : 20.
இச்சுலோகப் பகுதிக்கு
வியாக்கியாதா எழுதும் பொருள்
|