பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
156

ஸ்ரீர

ஸ்ரீராமனைப் பார்த்த மகரிஷிகள் கூற்று. ஆக, ‘இவர்கள், தங்கள் கண் வட்டத்திலே உண்டு உடுத்துத் திரிகிற இதுவே காரணமாக நலிவர்கள்,’ என்பதாயிற்று. ‘தங்களுடைய சரீரப் பாதுகாப்பிற்காகப் பிறரைக்கொன்று ஜீவிக்கிற திண்ணிய வீரக்கழலைக் காலிலேயுடைய அசுரர்கள். இறைவன், ரக்ஷிக்கைக்கு 1‘அது எனக்கு விரதம்,’ என்று அறுதியிட்டு இருக்குமாறு போன்று, இவர்கள் பிறரை நலிவதற்கு அறுதியிட்டு வீரக்கழலைக் கட்டியிருப்பவர்கள்’ என்பார், ‘கழல் கால் அசுரர்’ என்கிறார். ‘அவனுடைய ரக்ஷணத்துக்கு ஈடான கிருபையைத் தவிர்க்கிலும், இவர்கள் பிறரை நலிவதற்கு இட்ட வீரக்கழலைத் தவிர்க்க ஒண்ணாது,’ என்பார், ‘திண்கழல்’ என்கிறார்.

    தீங்கு இழைக்கும் திருமாலை - 2‘இவர்களும் நம்மாலே படைக்கப்பட்டவரன்றோ?’ என்று குடல் தொடக்கைப் பார்த்திருப்போமாகில், நம் விபூதி அழியும்; இவர்களை அழியச்செய்தாகிலும் விபூதியை நோக்கும் விரகு ஏதோ?’ என்று, 3‘சினேகிதன் என்று நெருங்கி வந்த இவனை, என் உயிருக்குக் கேடு வருவதாக இருப்

_____________________________________________________

  வருமாறு: ‘தேவயம் பவதா ரக்ஷ்யா:- ஆர்த்தரான நாங்கள் ஆர்த்த
  ரக்ஷணத்திலே அதிகரித்த தேவர்க்கு ரக்ஷ்யர். (ஆர்த்தர் - துன்புற்றவர்).
  ‘உங்களை நமக்கு ரக்ஷிக்க வேண்டுகிறது என்? பண்ணின உபாசனங்
  கொண்டு வளைக்கின்றீர்களோ?’ என்ன, ‘அது சொல்லில் தேவர்க்குக்
  கண்ணழிவு சொல்லிவிடலாம்; (கண்ணழிவு - குறைவு) பகவத் விஷய
  வாசிந:- தேவரீருடைய தேசத்தில் கிடக்கிறமை உண்டே, இதில்
  சொல்லலாம் கண்ணழிவு இல்லையிறே. ‘நாம் காக்கிற எல்லைக்குப்
  புறம்புகாண்’ என்று சொல்லலாமாகில் சொல்லிக்காணும். ‘இவற்றின்
  புறத்தாள் என்றெண்ணோ’ (திருவிருத். 33). என்னக் கடவதிறே,’ என்பது.

1. ஸ்ரீராமா. யுத். 18 : 33.

2. ‘அணிமணிப் பைம்பூண் அமரர்க்கு முதல்வன்நீ
   திணிநிலங் கடந்தக்கால் திரிந்தயர்ந் தகன்றோடி
   நின்னஞ்சிக் கடற்பாய்ந்த பிணிநெகிழ் பவிழ்தண்தார்
   அன்னவர் படவல்லா அவுணர்க்கு முதல்வன்நீ;
   அதனால், பகைவ ரிவரிவர் நட்டோ ரென்னும்

   வகையும்உண்டோநின் மரபறி வோர்க்கே!’

(பரிபா. 3 : 52-58)

  என்னும் பகுதியினை ஈண்டு ஒப்பு நோக்குக.

3. ஸ்ரீராமா. யுத். 18 : 3.

  ‘மற்றினி யுரைப்ப தென்னை? மாருதி வடித்துச் சொன்ன
   பெற்றியே பெற்றி யன்ன தன்றெனில் பிறிதொன் றானும்
   வெற்றியே பெறுக தோற்க வீகவீ யாது வாழ்க
   பற்றுத லன்றி உண்டோ அடைக்கலம் பகர்கின் றானை?’

  என்றார் கம்ப நாட்டாழ்வார்

(கம்பரா. விபீட. 108.)