பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
162

யாய்த் தன்னைத் தங்களுக்காக ஆக்கிவைத்தால், 1தங்கள் வாய் கொண்டு மானிடம் பாடாதே, 2‘என் தஞ்சனே! நஞ்சனே! வஞ்சனே! என்னும் எப்போதும் என் வாசகம்,’ என்கிறபடியே, ‘வாய் படைத்த பிரயோஜனம் பெற்றோம்’ என்று ஏத்தாதார். அலைகொள் நரகத்து அழுந்திக் கிடந்து உழக்கின்ற வம்பர் - ‘இந்நரகத்திலே போய்ப் புகுவர்கள்’ என்கிறார். ‘தடுகுட்டமாகப் பறவாமை நரகம்’ என்கிறார். ‘ஆயின், இது நரகமாமோ?’ எனின், 3‘ஸ்ரீராமா! உம்மோடு கூடியிருக்கும் இருப்பு யாது ஒன்று உண்டு? அது சுவர்க்கம்; உம்மைப் பிரிந்திருக்கும் இருப்பு யாது ஒன்று உண்டு? அது நரகம்,’ என்றார் இளைய பெருமாள்; ஆதலால், சுவர்க்க நரகங்கள்தாம் அவர் அவர்களுக்கு வகை செய்யப்பட்டனவாய் அன்றோ இருப்பன? ‘ஆயின், எல்லார்க்கும் இப்படி இருக்கவில்லையே?’ எனின், தமக்கு இருந்தபடியாலே சொல்லுகிறார்.

(3)

270

வம்புஅவிழ் கோதை பொருட்டா
    மால்விடை ஏழும் அடர்த்த
செம்பவ ளத்திரள் வாயன்
    சிரீதரன் தொல்புகழ் பாடிக்
கும்பிடு நட்டம்இட்டு ஆடிக்
    கோகுஉகட்டு உண்டுஉழ லாதார்
தம்பிறப் பால்பயன் என்னே
    சாது சனங்க ளிடையே?

    பொ-ரை : ‘வாசனையோடு மலர்கின்ற மலர் மாலையையுடைய நப்பின்னைப் பிராட்டி காரணமாகப் பெரிய இடபங்கள் ஏழனையும் கொன்ற செம்பவளத் திரள் வாயன், சிரீதரன், அவனுடைய இயல்பாகவே அமைந்துள்ள புகழ்களைப் பாடி, வணக்கத்தோடு நடனத்தையும் செய்து ஆடி, அடைவு கேடான ஆரவாரத்தைச் செய்து திரியாதவர்களுடைய பிறப்பால், நன்மக்கள் நடுவில் என்ன பயன் உண்டு? ஒரு பயனும் இன்று,’ என்பதாம்.

________________________________________________ 

1. திருவாய். 3. 9 : 9.
2. திருவாய். 3. 8 : 2.
3. ஸ்ரீராமா. அயோத். 30 : 18.