பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
186

New Page 1

     தேவ பிரானை - அவ்வடிவழைகையும், அக்கண்ணழகையும் நித்தியசூரிகளை அனுபவிப்பிக்குமாறு போன்று என்னை அனுபவிப்பித்து, எனக்கு உபகாரகன் ஆனவனை. ஒருமை மனத்தினுள் வைத்து - ஒரு பிரயோஜனத்துக்காக அன்றி, நெஞ்சிலே இருக்கை தானே பிரயோஜனமாக நெஞ்சிலே வைத்து. இதனால், மேற் பாசுரத்திலே 1பிரயோஜநாந்தரபரரை நிந்தித்தார் என்னுமிடம் தோன்றுகிறதே அன்றோ? உள்ளம் குழைந்து எழுந்து ஆடிப் பெருமையும் நாணும் தவிர்ந்து பேதைமை தீர்ந்து பிதற்றுமின் - இப்படி வேறு பலனைக் கருதாதவராய் நெஞ்சிலே வைத்தவாறே, அகவாய் நெகிழ்ந்து அந்த நெகிழ்ச்சியோடே இருந்த இடத்தில் இராமல் ஆடி, ‘பகவானுடைய குணங்களைக் கேட்டார் உரையும் செயலும் வேறுபட்டவராதல் நமக்குப் போருமோ?’ என்கிற செருக்கின் காரியமான மேன்மையும், ‘நாம் பிறர் அறியும்படி உரையும் செயலும் வேறுபட்டவராதல் எங்ஙனே?’ என்றிருக்கிற நாணமும், ‘எல்லாவளவிலும் நம் அகவாய் ஒருவர்க்கும் தெரியாதபடி மறைத்துக்கொண்டு இருக்க வேண்டாவோ?’ என்றிருக்கிற அறிவு கேட்டையும், இவற்றை அடையப் போகட்டு, அடைவுகெட ஏத்துங்கோள். இதுவே உங்களுக்குப் புருஷார்த்தம் என்கிறார்.

(10)

277

தீர்ந்த அடியவர் தம்மைத்
    திருத்திப் பணிகொள்ள வல்ல
ஆர்த்த புகழ்அச் சுதனை
    அமரர் பிரானைஎம் மானை
வாய்ந்த வளவயல் சூழ்தண்
    வளம்குரு கூர்ச்சட கோபன்
நேர்ந்தஓர் ஆயிரத்துஇப் பத்தும்
    அருவினை நீறு செய்யுமே.

    பொ-ரை : அவனே உபாயமும்  உபேயமும் என்று உறுதி பூண்ட அடியவர்களை அவர்களுடைய தடைகளைப் போக்கி அடிமை கொள்ளும் ஆற்றலையுடைய புகழ் நிறைந்த அச்சுதனை, அமரர் பிரானை, எம்மானை, வளப்பம் நிறைந்த வயல்கள் சூழ்ந்த குளிர்ந்த வளப்பத்தையுடைய திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த ஒப்பற்ற ஆயிரம் பாசுரங்களுள்

_____________________________________________________

1. பிரயோஜநாந்தரபரர் - வேறு பலன்களில் நோக்குள்ளவர்; ஈண்டுக்கேவலர்.