பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
187

இப

இப்பத்துப் பாசுரங்களும் போக்கற்கரிய தீவினைகளைச் சாம்பலாக்கும்.

    வி-கு : தீர்ந்த அடியவர் - எல்லாவற்றையும் விட்ட அடியவர்; தீர்தல் - விடுதல். ‘தீர்தலும் தீர்த்தலும் விடற்பொருட் டாகும்’ என்பது தொல்காப்பியம். அச்சுதன் - அடியார்களை நழுவ விடாதவன். நீறு - சாம்பல்; ‘சாம்பரைப் பூசித் தரையிற்புரண்டு நின்தாள் பரவி’ என்பது தேவாரம். நேர்தல் - கூறுதல். ‘வாய்ந்த சடகோபன்’ எனக் கூட்டுக. இப்பாசுரம் இடையின எதுகையால் வந்தது.

    ஈடு : முடிவில், 1‘இத்திருவாய்மொழி கற்றார், பகவானுடைய குணங்களை அநுசந்தானம் பண்ணினால், விகாரம் இல்லாதவராய் இருக்கைக்கு அடியான மஹாபாவத்தை இதுதானே அடியோடு போக்கும்,’ என்கிறார்.

    தீர்ந்த அடியவர்தம்மைத் திருத்திப் பணி கொள்ள வல்ல - 2‘பிராப்பியப் பிராபகங்கள் அவனே’ என்று இருக்குமவர்கள் ஆயிற்றுத் தீர்ந்த அடியவராகிறார்; அவர்களைத் திருத்திப் பணி கொள்ளுகையாவது, அவர்களுடைய பிராப்பியப் பிராபக விரோதிகளைப் போக்கி அடிமை கொள்ளுகை. 3‘ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும்’ என்று இருந்தாலும், 4‘முகப்பே கூவிப் பணிகொள்ளாய்’ என்கிறபடியே, அடிமை கொள்ள வேண்டுமாதலின், ‘திருத்திப் பணி கொள்ள வல்ல’ என்கிறது. ஆர்ந்த புகழ் அச்சுதனை - குறைவற்ற கல்யாண குணங்களையுடையவனாய், 5‘தன்னை அடைந்தாரை நழுவவிட்டான்’ என்னும் வார்த்தையை ஒரு நாளும்

____________________________________________________ 

1. ‘அருவினை நீறு செய்யும்’ என்றதனைக் கடாக்ஷித்து, அவதாரிகை
  அருளிச்செய்கிறார்.

2. பிராப்பியம் - அடையத்தக்க பொருள்; பரம்பொருள். பிராபகம் -
  அடைதற்குரிய வழி.

3. திருவாய். 3. 3 : 1.

4. திருவாய். 8. 5 : 7.

5. ‘ஒரு நாளும் நழுவவிடாதவன்’ என்பதனை, பிள்ளைலோகாசார்யர்
  அருளிச்செய்த அஷ்டாதச ரஹஸ்யத்தில் ஏழாவது கிரந்தமான பிரபந்த
  பரித்ராணத்தில் விளக்கமாகக் காணலாகும்.