பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
189

ஆற

ஆறாந்திருவாய்மொழி - ‘செய்ய தாமரை’

முன்னுரை

    ஈடு : 1சர்வேசுவரன் திருவடிகளில் கைங்கரிய ருசியுடையார்க்கு அதனைக் கொடுக்கக் கடவனுமாய், அவ்வடிமைதான் அவன் தனக்கு இனியதாயிருக்கக்கடவதுமாய், அவ்வழியாலே இம்மக்களுக்கு உத்தேஸ்யமாகக் கடவதுமாயிருக்க, அதனை இழக்கையாலே நிந்திக்க வேண்டும்படி இருந்தமையின், இவ்வடிமையிலே சேர்ந்தவர்களைக் கூட்டிக்கொண்டு, அது இல்லாதாரை வெறுத்தவராய் நின்றார் மேல் திருவாய்மொழியில்; அவ்வாறு வெறுத்தல், தாமே விழுவாரைத் தடிகொண்டு அடித்தலைப் போன்றது என்று நினைந்து, ‘இவர்கள் பண்டே அறிவு கேட்டாலே வழி தப்பிப் போய்க் கேட்டினை அடையாநின்றார்கள்; நாம் இவர்களைக் கைவிட ஒண்ணாது; நலத்தைச் சொல்லுவோம்,’ என்று பார்த்து, 2பிராட்டி நலம் அருளிச் செய்தாற்போலே நலத்தை அருளிச்செய்கிறார் இத்திருவாய்மொழியில்.

_____________________________________________________

1. தாம் உபதேசிக்கிற அதிகாரிகளுக்கும் தம்மைப் போன்று கைங்கரியத்தில்
  பிராப்தியுண்டு என்று காட்டுகைக்காக ‘ஒழிவில் காலமெல்லாம்’ என்ற
  திருவாய்மொழி தொடங்கிச் சங்கதி அருளிச்செய்கிறார், ‘சர்வேஸ்வரன்’ என்று
  தொடங்கி. ‘சர்வேஸ்வரன்’ என்றது முதல் ‘உத்தேஸ்யமாகக் கடவதுமாயிருக்க’
  என்றது முடிய, ‘ஒழிவில் காலமெல்லாம்’ என்ற திருவாய்மொழியின் நுவாதம்.
  அதற்குமேல் ‘வெறுத்தவராய் நின்றார்’ என்றது முடிய, மேல்
  திருவாய்மொழியின் அநுவாதம். ‘இப்படி நிந்திக்கத் தக்கவர்கட்கு
  உபதேசிக்கைக்குக் காரணம் என்?’ என்ன, ‘அருள் கண்டீர் இவ்வுலகினில்
  மிக்கதே’ என்கிறபடியே, மிக்க பேரருளே காரணம் என்கிறார், ‘அவ்வாறு
  வெறுத்தல்’ என்று தொடங்கி.

2. ‘நண்ணாதார் மெய்யில் ஊன் ஆசை நிர்வேதத்தோடே ஆஸ்திக்ய
  அமாநித்வாதிகள் விஞ்சின பிரணிபாத அபிவாதந பரிப்ரச்ந சேவாபரர்க்கு
  உளங்கொள் பேசுமளவன்று என்னும் அர்த்தத்தை வம்மின் விரோதம் ஈனச்
  சொல் எவ்வுயிர்க்கும் அறிய என்று அடைவுகெட அதபஸ்கர்க்கு
  உபதேசிக்கிறது ஞாலத்தார் பந்தபுத்தியும் அநர்த்தங்கண்டு
  ஆற்றாமையும் மிக்க கிருபையுமிறே.’ ‘தாய்க்கும்
மகனுக்கும் தம்பிக்கும்
  இவர்க்கும் இவர் அடிபணிந்தவர்க்குமே இவையுள்ளது’ என்னும்
  ஆசார்யஹ்ருதய ஸ்ரீசூக்திகளை இங்கு அநுசந்திக்கத் தகும்.

(திருதீயபிரகரணம். சூ. 54, 55)