பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
195

காரணப் பொருளை உத்தேசித்து அப்பொருளுக்கே தாமரைக் கண்ணனாதல் முதலியவைகளை விதிக்கிறார்,’ என்னுதல்.

    செய்ய தாமரைக் கண்ணனாய் - 1‘சூரியனுடைய ஒளியால் மலர்ந்த தாமரை மலர் எவ்வண்ணம் இருக்கும்? அவ்வண்ணமே அந்தப் பரம்பொருளான நாராயணனுடைய திருக்கண்கள் இருக்கின்றன,’ என்றும், 2‘யாகங்களுக்கு ஈஸ்வரனாயும் யாகபுருஷனாயும் தாமரைக்கண்ணன் என்னும் பெயரையுடையவனாயுமிருக்கிற அந்த விஷ்ணு’ என்றும் சுருதி ஸ்மிருதி முதலியவைகளில் சொல்லப்படாநின்றுள்ள அப்போது அலர்ந்த செவ்வித்தாமரை போலே இருந்துள்ள திருக்கண்களையுடையவனாய். உலகு ஏழும் உண்ட அவன் - வடிவழகில் தாமரைக் கண்ணன் ஆதலைப் போன்று குணங்களில் பிரளய ஆபத்தில் துணைவன் ஆயினமையும். ‘வையம்’ என்றது, பூமியை. ‘வானம்’ என்றது, மேலே உள்ள உலகங்களை. ‘மனிசர்’ என்றது, வையத்தில் உள்ளாரை. ‘தெய்வம்’ என்றது, வானத்தில் உள்ளாரை. ‘மற்றும்’ என்றது, விலங்கு பறவை தாவரங்களை. மீண்டும், ‘மற்றும்’ என்றது, அவற்றுக்குக் காரணமான ஐம்பெரும்பூதங்களை. மீண்டும் மற்றும் என்றது, அவைதமக்கும் காரணமான மகான் முதலிய தத்துவங்களை. ‘முற்றும்’ என்றது, மேற்கூறியவை எல்லாவற்றையும்.

    ‘முற்றுமாய் வெளிப்பட்ட இவற்றை, செய்ய சூழ் சுடர் ஞானமாய்ப் படைத்தான்’ என்னுதல்; அன்றியே, 3‘தனிமாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும்படியாகத் தான் தோன்றி’ என்றும் 4‘பல பொருள்களாக ஆகக்கடவேன்’ என்றும் சொல்லுகிற

____________________________________________________ 

1. சாந்தோக்ய உபநிடதம், 1 : 6.

2. விஷ்ணு தர்மம். இங்குப் பரிபாடல், 2-ஆம் பாடல், 60-65 அடிகளையும்
  அவற்றின் உரையையும் நோக்குக.

  ‘மண்பா லமரர் வரம்பாருங் காணாத
  எண்பா லுயர்ந்த எரியோங்கு நல்வேள்வி
  உண்பாய்நீ ஊட்டுவாய் நீஇரண்டும் ஒக்கின்ற
  பண்பா ரறிவார் பகராய் பரமேட்டி!’

  என்றார், கம்பநாட்டாழ்வார்.

3. திருவாய். 8. 10 : 7.

4. தைத்திரீய ஆனந். 6 : 91.