பக்கம் எண் :

திருவாய்மொழி ஈட்டின் தமிழாக்கம்
 
மூன்றாம் தொகுதி
 
196

படியே, முற்றவும், உண்டாகைக்காக 1இவையாய்க்கொண்டு தான் தோன்றி இவற்றைப் படைத்தான் என்னுதல். அப்போது, வெளிப்பட்டு என்கிறது, ‘படைத்தலில் கருத்து உள்ளவனாய்த் தோன்றி’ என்றபடி. செய்ய சூழ் சுடர் ஞானமாய் - ஞானத்துக்குச் செவ்வையாவது, வருத்தம் அற்று இருக்கை. அன்றியே, 2‘முன்பு படைத்த வண்ணமே படைத்தார்’ என்கிறபடியே, ‘அதனுடைய கர்மத்துக்குத் தகுதியாகப் படைத்த செவ்வை’ என்னுதல். சூழ்தலாவது, காரியக் கூட்டத்தில் எல்லாம் பரந்திருக்கை. சுடராவது, மழுங்காத ஞானமாய் மிக விளக்கமாயிருக்கை. ‘ஞானமாய்’ என்றது, ‘இப்படிப்பட்ட நினைவின் உருவமான ஞானத்தை உடையவனாய்’ என்றபடி. ‘வெளிப்பட்ட இவை’ என்றது, ‘பிரமாணங்களால் அறியப்படுகின்ற இவை’ என்றபடி. ஆக, இதுகாறும் உலக காரணன் ஆதல் சொல்லிற்று. மேல் நித்திய விபூதியையுடையவனாய் இருத்தலைச் சொல்லுகிறது:

    பின்னும் - லீலாவிபூதியையுடையனானதற்கு மேலே. மொய் கொள் சோதியோடு ஆயினான் - 3’சூரியன் சந்திரன் அக்நி இவர்களைக்காட்டிலும் கோடி மடங்கு அதிகமாய் விளங்குகிற, மஹாத்துமாவான விஷ்ணுவினுடைய அந்த ஸ்ரீ வைகுண்டம்’ என்கிறபடியே, செறிந்துள்ள ஒளியை உடைத்தான நித்திய விபூதியையுடையனாய் இருக்கும் இருப்பைச் சொல்லுகிறது. அன்றியே, ‘ஒளி நிறைந்துள்ள கல்யாண குணங்களையுடையவன்’ என்னுதல்; சோதி - குணம். ‘சோதி’ என்றது, குணங்களுக்கெல்லாம் உபலக்ஷணம். 4‘இப்போது குணங்களைச் சொல்லுகிறது என்?’ என்னில், குணங்களையுடைய பொருள் அன்றோ பற்றத்தக்கது? ஆதலால், சொல்லுகிறது. ஒரு மூவராகிய

_____________________________________________________

1. இவையாய்க்கொண்டு - இவற்றை உண்டாக்குகைக்காக. ‘அப்போது’ என்றது,
  இரண்டாவதாகக் கூறும் பொருளைத் தழுவுகின்றது.

2. தைத்திரீய நாராயண உபநிடதம், 1.

4. பாரதம் ஆரண்ய பர்வம்.

5. ‘இப்போது’ என்றது, உபதேசிக்கிற இந்த இடத்தில் என்றபடி.

  ‘எனவிவை யன்ன மாற்றம் இயைவன பலவுங் கூறிப்
  புனைகழல் புலவு வேற்கைப் புளிஞர்கோன் பொருவில் காதல்
  அனையவற் கமைவிற் செய்தான்; ஆரவற் கன்பி லாதார்?
  நினைவருங் குணங்கொ டன்றோ இராமன்மேல் நிமிர்ந்த காதல்?’

  என்றார், கம்பநாட்டடிகள்.

(அயோத். குகப். 37.)