|
பட
பட்டது என்ன, தமப்பனாகிய
பிரமனிடத்திற்செய்த பிரமஹத்தி என்ன, அசுரர்களால் உண்டான துன்பங்கள் என்ன’ என்பன போன்று
சொல்லுகின்றவற்றைப் போக்கும் தன்மையனாய் உள்ளவனை. போக்குகிற அவன் பாரிப்புக்கு இவை
மிக அற்பமாய் இருக்கிறபடியைத் தெரிவிப்பார் ‘உள்ளன’ என்கிறார்.
தடம் கடல் கிடந்தான்தன்னை
- ‘இன்னம் இவர்கட்கு ஆபத்து வந்த போது நம்மைத் தேடித் திரிய ஒண்ணாது’ என்று ஏற்கவே கடலில்
இடங்கொண்டவனை. தேவதேவனை - பிரமன் முதலியோர்கட்குப் புகலிடமாய்க்கொண்டு ஆயிற்றுக் கண்வளர்ந்தருளுகிறது.
அன்றியே, ‘நித்தியசூரிகளால் ஏத்தப்படுகின்றவனை’ என்னலுமாம். தென்னிலங்கை எரி எழச்செற்ற
வில்லியை-நெருப்பானது இராவணபயத்தாலே புகமாட்டாத ஊரிலே தான் நினைத்தபடி பரவும்படி செய்ய வல்ல
வில்வலியையுடையவனை, இதனால், பிரமன் முதலியோர் கூப்பீடு கேட்டு எழுந்திருந்து செய்த தொழிலைத்
தெரிவித்தபடி. இனி, ‘தேவதேவனை’ என்பதனை, எரி எழச் செற்ற வில்லிக்கு விசேஷணம் ஆக்கலுமாம்;
அப்பொழுது, மனிதத்தன்மையில் பரத்துவம் சொல்லுகிறார் என்பது போதரும். பாவநாசனை - கையும்
வில்லுமாய் இருக்கிறபடியைக் காண எல்லாருடைய பாவங்களும் போம். என்றது, 1‘இரகு
நந்தன! நீதான் எல்லா உலகத்தாருடைய பாவங்களையும் போக்குகிறவன்,’ என்கிறபடியே, அந்நிலையிலே
மக்கள் எல்லாருடைய பாவங்களையும் போக்கும் தன்மையன் ஆனவனை என்றபடி. பங்கயம் தடம் கண்ணனை
- பாவத்தை வளர்ப்பவன் ஆனாலும், விடவொண்ணாதபடியான கண்ணழகையுடையவனை. பரவுமினோ -
____________________________________________________
வேதங்களைப் பறிகொடுத்தவன்,
பிரமன்:
அயக்கிரீவ
அவதாரத்தால்
அதனை நீக்கினான் இறைவன். ‘பிரமஹத்தி’ முதலானவற்றை
அடைந்தவன்,
சிவன்:
‘வெந்தார் என்பும்
சுடுநீறும் மெய்யிற் பூசிக் கையகத்தோர்
சந்தார் தலைகொண்
டுலகேழும் திரியும் பெரியோன் தான்சென்று
‘எந்தாய் சாபம்
தீர்’ என்ன இலங்கு அமுதுநீர் திருமார்பில்
தந்தான் சந்தார்
பொழில்சூழ்ந்த சாளக் கிராமம் அடைநெஞ்சே!’
என்றார்,
திருமங்கை
மன்னன்.
‘அசுரர்கள்’
என்றது, பத்மாசுரன் முதலியவர்களை.
1.
ஸ்ரீராமா,
உத். 82 : 9.
|